பொங்கல் தொகுப்பில் 100 கோடி சுருட்டல்… ஓ! இந்த ஊழல் வெளிச்சம் தான் விடியல் போல… அண்ணாமலை ட்விட்..!

மிழ்நாடு அரசு ரேஷன் பொருள்களை விநியோகம் செய்வதற்கு தேர்ந்தெடுத்திருக்கும் தனியார் நிறுவனங்கள் தரமற்ற பொருள்களை விநியோகம் செய்தவை.

தற்போது மீண்டும் அதே நிறுவனங்களை தமிழக அரசு தேர்ந்தெடுத்திருக்கிறதென்று அண்ணாமலை விமர்சனம் செய்திருக்கிறார். மேலும் இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,

தரமில்லாத பொங்கல் பரிசு சப்ளை செய்த 6 நிறுவனங்களுக்கு சுமார் ரூ.3.75 கோடி அளவிற்கு அபராதம் விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. தவறு செய்த எந்த நிறுவனத்தையும் தடை செய்யவில்லை. அந்த ஆறு நிறுவனங்களில், தரமற்ற பருப்பு மற்றும் பாமாயில் சப்ளை செய்த அருணாச்சலா இன்பெக்ஸ்.. தரமில்லாத பொங்கல் பரிசு சப்ளை செய்த 6 நிறுவனங்களுக்கு சுமார் ரூ.3.75 கோடி அளவிற்கு அபராதம் விதித்து @arivalayam அரசு உத்தரவிட்டது. தவறு செய்த எந்த நிறுவனத்தையும் தடைசெய்யவில்லை.

இது வெறும் பருப்பு மற்றும் பாமாயில் கணக்குதான் இன்னும் மிளகு, புளி, மசாலா பொருட்கள், மளிகை பொருட்கள், என்ற வகையிலே மேலும் சில நூறு கோடிகள் சுருட்டப்பட்டு இருக்கலாம்.தவறுகளைத் திருத்திக் கொள்ளாமல், தரமற்ற பொருளை தந்த அதே நிறுவனத்திற்கு தண்ணீர் தராமல், சொற்பத் தொகையை அபராதம் விதித்து மீண்டும் அதே பொருளை சப்ளை செய்ய ஆர்டர் தருவது, சந்தேகத்திற்கு இடமில்லாத தவறு நடப்பதை வெளிச்சப்படுத்துகிறது. இந்த ஊழல் வெளிச்சம் தான் விடியல் போல…