பிரதமர் மோடி அரசியல்வாதி அல்ல… உலகத் தலைவர்.. தமிழ்நாடு ஓபிசி பொதுச்செயலாளர் வீர திருநாவுக்கரசு பேச்சு..!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி  72 வது பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருப்பதை தொடர்ந்து புதுச்சேரி லாஸ்பேட் தனியார் ஹோட்டலில் பிரதமரின் வாழ்க்கை தொலைநோக்கு கொள்கை மற்றும் சாதனைகள் குறித்து அனைத்து துறை அறிவு சார் வல்லுநர்கள் கலந்து கொண்ட கருத்தரங்கு பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் சாமிநாதன்  தலைமையில் கருத்தரங்கு நடைபெற்றது கருத்தரங்கிற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு ஓ பி சி அணி மாநில பொதுச் செயலாளர் வீர திருநாவுக்கரசு கலந்து கொண்டார்.

நடைபெற்ற கருத்தரங்கில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பாராளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி பாஜக மாநில துணைத்தலைவர் ரவிச்சந்திரன் உழவர்கரை மாவட்ட தலைவர் நாகேஸ்வரன் மாநில செயலாளர் லதா, ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியினை அறிவு சார் பிரிவு மாநில அமைப்பாளர் முருகன் தொழில்துறை பிரிவு மாநில அமைப்பாளர் ராஜகணபதி பொருளாதாரப் பிரிவு மாநில இணை அமைப்பாளர் NJL ரமேஷ் தொழில் துறை பிரிவு மாநில இணை அமைப்பாளர் திருமால் அமைப்புசாரா பிரிவு மாநில இணை அமைப்பாளர் கமலன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த கருத்தரங்கில் சிறப்புரை நிகழ்த்திய தமிழ்நாடு ஓபிசி அணி பொதுச் செயலாளர் வீரர் திருநாவுக்கரசு சுய நலமில்லாமல் யார் மீதும் வெறுப்பு காட்டாத ஒரு ஒப்பற்ற தலைவர் பிரதமர் அவர்கள் பிரதமர் என்றாலே அதற்கு நேர்மை என்று ஒரு பெயர் உண்டு எந்த வேலை செய்தாலும் அதில் ஒரு நேர்மை இருக்க வேண்டும் என்று நினைப்பவர் தான் நமது பிரதமர் நரேந்திர மோடி என்றார்.

எப்போதும் இந்த நாட்டிற்காக உழைக்க வேண்டும் என்று ஒரே குறிக்கோளோடு இருப்பவர் பாரதப் பிரதமர் அப்படிப்பட்ட அவரது வாழ்க்கையில் சில நம்ப முடியாத சம்பவங்களும் நடந்து உள்ளது, அதுதான் குஜராத் மாநிலத்தில் முதன் முதலாக அவர் முதலமைச்சர் பொறுப்பேற்றுக் கொண்டது என்று பிரதமரே தெரிவித்துள்ளார் எனவும்சுயநலமில்லாமல் யார் மீதும் விருப்பு வெறுப்பு காட்டாத ஒரு ஒப்பற்ற தலைவர் தான் நரேந்திர மோடி என்று பேசிய திருநாவுக்கரசு…

மோடி என்பவர் அரசியல்வாதி அல்ல அவர் ஒரு உலகத் தலைவர் எனவும் எந்த நேரமும் நமது நாட்டைப் பற்றிய பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பவர் என்றார்.

உலகத்திலேயே மிகப்பெரிய கட்சி பாரதிய ஜனதா கட்சி என்றும் இந்த கட்சியில் உறுப்பினராக இருந்து வேலை செய்வது ஒரு தேசப்பணி, தெய்வீக பணி என்று குறிப்பிட்ட திருநாவுக்கரசு நாளை நமதே 40 நமதே என்று நாடாளுமன்றத் தேர்தலில் நாம் கடுமையாக உழைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.