விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் குமரன் தெருவை சேர்ந்த ஜோஸ்வா ரஞ்சித் வயது 47 இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் போக்குவரத்து போலீசில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பணிக்கு சென்று இவர் வீடு திரும்பியதும் அவர் வெகுநேரமாக உணவருந்த வராததை அறிந்த அவரது தாயார் மாடிக்கு சென்று பார்த்த போது கதவு உள்பக்கமாக பூட்டு போட்டு இருந்தது. நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் கதவை உடைத்து பார்த்தபோது ஜோஸ்வா ரஞ்சித் தூக்கில் பிணமாக தொங்கினார். இதைக் குறித்து அவரது தாய் அமிர்த பாக்கியம் அளித்த தகவலின் பெயரில் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரஞ்சித்தின் உடலை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனை பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளார். இறந்து போன ரஞ்சித்தின் முதல் மனைவி கிரேசி கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பே உடல் நலக்குறைவால் இறந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளன. இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பாகவே நிர்மலா என்ற பெண் போலீசை ரஞ்சித் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். நிர்மலா தற்போது கோவில்பட்டியில் போலீசாராக வேலை பார்த்து வருகிறார்.இந்நிலையில் பணிக்கு சென்று வந்த போலீஸ் ஏட்டு ரஞ்சித் செல்போனில் அதிக நேரம் பேசியதாக கூறப்படுகிறது. இவரது தற்கொலைக்கு குடும்ப பிரச்சினை காரணமா அல்லது பணி சுமை காரணமா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றன.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0