அமைதி தூதுவனாக இருக்கிறார் பிரதமர் மோடி – உலக நாடுகளின் தலைவர்கள் புகழாரம்..!!

கொரானா காலக்கட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வீடியோ கான்பரசிங் மூலம் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு உஸ்பெகிஸ்தானின் சாமர்கண்டில் தலைவர்கள் நேரடியாக பங்கேற்று மாநாட்டை நடத்தி வருகின்றனர்.

மோடி-புதின்:

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டின் போது நடந்த இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது, ​​பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் உக்ரைன் போர் குறித்து பேசியுள்ளார். இதற்காக பல மேற்கத்திய நாடுகள் பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றன.

முதல் பாராட்டு பிரான்சிடமிருந்தும் அதன்பிறகு அமெரிக்காவிலமிருந்தும் வந்தது. பிரதமர் பல நாடுகளின் செய்தி ஊடகங்களில் தலைப்புச் செய்தி நாயகனாக வலம் வருகிறார். இப்போது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் கூட, பெரிய நாடுகளின் தலைவர்கள் இந்தியாவையும் பிரதமர் மோடியையும் பாராட்டி வருகிறார்கள்.

எதற்காக இத்தனை பாராட்டு?:

உஸ்பெகிஸ்தானின் சாமர்கண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் புதினைச் சந்தித்து “இது போரின் காலம் அல்ல. மேற்குலகைப் பழிவாங்குவதற்கும், கிழக்கிற்கு எதிராகப் போட்டி போடுவதற்கும் இது நேரமல்ல. இறையாண்மையுள்ள நாடுகள் அனைத்தும் நம் முன் உள்ள சவால்களை ஒற்றுமையாக எதிர்கொள்ள வேண்டிய நேரம் இது.” என்று கூறியுள்ளார். பேச்சுவார்த்தையின் போது பிரதமர் மோடி ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை புதினுக்கு அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார்.

புதின் பதில்:

மோடிக்கு பதிலளிக்கும் வகையில் புதின், “உக்ரைனில் நடந்து வரும் மோதல்கள் மற்றும் அதைக் குறித்த மோடியின் கவலைகள் குறித்து நிலைப்பாட்டையும் நன்கு அறிவேன். கூடிய விரைவில் போரை நிறுத்த முயற்சிப்போம்.” என புதின் கூறியுள்ளார்.

பிரான்ஸ் அதிபர்:

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில், “இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம், இது போருக்கான நேரம் அல்ல என்று கூறியது முற்றிலும் சரி”என்று கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர்:

“பிரதமர் மோடி கூறியது உண்மை மற்றும் நியாயமானது என்று நான் நினைக்கிறேன். அவரது தரப்பில் இருந்து கொள்கைகளின் அடிப்படையில் ஒரு அறிக்கை. அதில் நிறைய உள்ளது” என்று கூறியுள்ளார் ஜோபைடன்.

அமெரிக்க தேசிய ஆலோசகர்:

“உக்ரைன் போர் முடிவுக்கு வர வேண்டும். இது ஐக்கிய நாடுகளின் சாசனத்தின் அடிப்படை விதிமுறைகளை மீறுவதாகும். ரஷ்யா பலவந்தமாக பறிமுதல் செய்த பகுதிகளை உக்ரைனிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார். மேலும் “பிரதமர் மோடி கூறியது நூறு சதவீதம் சரியானது. அதை நான் வரவேற்கிறேன்” என ஜேக் சல்லிவன் கூறியுள்ளார்.