கோவைபுதூர், ஜாமியா நகரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 73) இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் வங்கிக்கு சென்று விட்டு,வீட்டுக்கு வந்தார். வீட்டின் முன் நிறுத்திவிட்டு கேட்டை திறக்க சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது அவரது இருசக்கர வாகனத்தில் இருந்த கைப்பையை காணவில்லை. அதில் பணம் ரூ.20 ஆயிரம், மற்றும் கிரெடிட் கார்டும் இருந்தது. யாரோ திருடி சென்று விட்டனர். இது தொடர்பாக பரலசுப்பிரமணியன் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0