ஆகம விதிப்படி அரசு நியமித்துள்ள அர்ச்சகர் நியமனம் செல்லும்-சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

கம விதிப்படி அரசு நியமித்துள்ள அர்ச்சகர் நியமனம் செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழக கோவில்களில், ஆகம விதிப்படி அர்ச்சகர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது. 18 வயது முதல் 35வயது வரையில், இருப்பவர்கள், ஒருவருட பயிற்சி முடித்தவர்கள் அர்ச்சர்கர்களாக, பூசாரிகளாக அந்தந்த கோவில் ஆகம விதிப்படி நியமிக்கலாம் என உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இதனை எதிர்த்து , சென்னை உயர்நீதிமன்றத்தில், 10க்கும் மேற்பட்ட வழக்குகள் இந்து அமைப்புகள் சார்பாக தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இது தொடர்பாக, ஏற்கனவே 2021ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம், அர்ச்சகர்கள் பணி நியமனம் நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது.’ என இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.

அதனை குறிப்பிட்டு, இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில் ஆகம விதிப்படி அரசு நியமித்துள்ள அர்ச்சகர் நியமனம் செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆகம விதிகள் பின்பற்றும் கோயில்களில் இந்த நியமனம் செல்லும் எனவும், ஆகம விதிகளை பின்பற்றும் கோவில்களை கண்டறிய 5 பேர் குழுவை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.