நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா நேற்று உற்சாகமாக
கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
அளிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் இதையும் மீறி கோவை நகரில் டாஸ்மாக் கடை அருகே மற்றும் மறைவான
இடங்களில் சிலர் மதுவை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தனர்.
இதையடுத்து போலீசார் மற்றும் மதுவிலக்கு அமல் பிரிவினர் கோவை நகரில்
பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது ரத்தினபுரி, ராமநாதபுரம்,
போத்தனூர், சிங்காநல்லூர், பீளமேடு, சரவணம்பட்டி, குனியமுத்தூர் உள்ளிட்ட
பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 18 பேரை போலீசார் கைது
செய்தனர். அவர்களிடம் இருந்து 500 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.2,300-யை
போலீசார் பறிமுதல் செய்தனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0