வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேளாண் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வுகூட்டம்..!

கோவை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து, அனைத்து வட்டார அளவிலான அலுவலர்கள் மற்றும் வேளாண் , தோட்டகலை துறை சார்ந்த பொறுப்பு அலுவர்களுக்கு மாவட்ட அளவிளான ஆய்வுகூட்டம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
இதற்கு கூடுதல் இயக்குநர்(பொ) (மத்திய அரசு திட்டம்) தோட்டகலைதுறை மண்டல
அலுவலர் சிவசுப்ரமணிய சாம்ராஜ் தலைமையில் தாங்கினார்.
மேலும், இத்திட்டத்தின் கீழ் சூலூர் வட்டாரத்தில் பட்டணம், மயிலாம்பட்டி,
பீடம்பள்ளி ஆகிய கிராமங்களில் தேர்வு செய்யப்பட்ட தரிசு நில தொகுப்புகளை
அவர்கள் ஆய்வு செய்தார்.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் அனைத்து கிராமங்களிலும் ஒட்டு மொத்த
வேளாண் வளர்ச்சியை உருவாக்கிட அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்புடன்
செயல்படுத்தப்பட்டு தன்னிறைவு பெற்ற கிராமமாக மாற்றவேண்டும் என்பதே
ஆகும். அதன்படி, தேர்வு செய்யப்பட்ட கிராம ஊராட்சியில் வேளாண், தோட்டகலை துறை சார்ந்த பொறுப்பு அலுவலர்களால் அடிப்படை புள்ளிவிபரங்கள் சேகரிக்கப்பட்டு
வேளாண் துறை, தோட்டகலைத்துறை, வேளாண் பொறியியல் துறை மற்றும் இதர சகோதர துறைகள் மற்றும் உழவர் நலன் சார்ந்த இதர துறைகளான ஊரக வளர்ச்சி துறை, கால்நடைபராமரிப்புதுறை, கூட்டுறவுத்துறை, மீன்வளத்துறை, பட்டுவளர்ச்சி
துறை ஆகிய துறைகள் மூலம் செயல்படுத்தப்படவுள்ள பணிகள் மற்றும் அதன்
மதிப்பீடு குறித்த விபரம் அடங்கிய விரிவான திட்ட அறிக்கை தயார்
செய்யப்பட்டுள்ளது.
விரிவான திட்ட அறிக்கை பணி தொடர்பாக மண்டல அலுவலரால் அனைத்து
அலுவர்களுக்கும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அனைத்து துறைகளின்
ஒருங்கிணைப்புடன் இத்திட்டத்தினை செயல்படுத்திட அறிவுரை வழங்கப்பட்டது.