சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடரில் வெண்கலம் பதக்கம் வென்ற இரு இந்திய அணிகளுக்கும் தலா ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பொதுப்பிரிவில் வெண்கலம் வென்ற இந்திய பி அணி, பெண்கள் பிரிவில் வெண்கலம் வென்ற இந்திய ஏ அணிக்கு பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை உலகமே பாராட்டும் வகையில் வெற்றிகரமாக தமிழக அரசு நடத்தி முடித்துள்ளது என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.