கோவை வ.உ.சி மைதானத்தில் சுதந்திர தினவிழா: தேசிய கொடி ஏற்றுகிறார் கலெக்டர் சமீரன்..!

நாட்டின் 76-வது சுதந்திர தின விழா, கொண்டாடப்பட உள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், கோவை வ.உ.சி மைதானத்தில் சிறப்பான முறையில் சுதந்திர தின நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மாவட்ட கலெக்டர் சமீரன் விழாவுக்கு தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். அதைத் தொடர்ந்து காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத் துறை, ஊர்க்காவல் படை, என்.சி.சி.மாணவர்கள் ஆகியோரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்கிறார்.கொரோனா காரணமாக, கடந்த ஆண்டு கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆண்டு கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது பொது மக்களுக்கும் அனுமதி அளிக்கப்பட உள்ளனர். விழாவுக்கான மேடை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளது. வரும் 13ஆம் தேதி வ.உ.சி மைதானத்தில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட உள்ளனர். மாநகரில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாவட்டப் பகுதிகளில் ஏறத்தாழஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். விழா நடைபெறும் வ.உ.சி மைதானம் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, துப்பாக்கி ஏந்திய காவலர்கள் நிறுத்தப்பட்டு,மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்படும்.ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்புப் படையினர் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.அனைத்து பிளாட்பாரமாக சோதனை செய்து பயணிகள் மற்றும் அவர்கள் கொண்டு வரும் பொருட்கள் ஸ்கேன் செய்யப்பட்டு பரிசோதிக்கப்பட்ட பிறகே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள.