நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடர்ந்து 11வது நாளாக முடங்கியது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 18ஆம் தேதி முதல்தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் விலைவாசி உயர்வு , ஜிஎஸ்டி , அக்னிபாத் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன. எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால், மழைக்கால கூட்டத்தொடரே தொடர்ந்து முடங்கியது. ஏற்கனவே அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி, மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் 27 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே கூச்சல் குழப்பம் என உறுப்பினர்கள் அமளியால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டதை அடுத்து, கடந்த 10 நாட்களாக அவை ஒத்திவைக்கப்பட்டது. சனி , ஞாயிறு விடுமுறை முடிந்து இன்று 11வது நாளாக நாடாளுமன்ற ஒரு அவைகளும் கூடியது. காலை 11 மணிக்கு அவை கூடியதும், எதிர்க்கட்சிகள் மீண்டும் தங்களது எதிர்ப்பை வெளிக்காட்ட தொடங்கிவிட்டன. மாநிலங்களவையை பொறுத்தவரை தொடக்கத்திலேயே உறுப்பினர்கள் முழக்கமிட்டதால், அவைத் தலைவர் வெங்கையா நாயுடு 12 மணி வரை அவையை ஒத்தி வைத்தார். முன்னதாக சிவசேனா, சஞ்சய் ராவத் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருப்பதால் அதே கட்சியை சேர்ந்த பிரியங்கா சந்துருவேதி ஒத்திவைப்பு தீர்மானம் அளித்து விவாதம் தேவை என கோரிக்கை விடுத்திருக்கிறார்.
பின்னர் மீண்டும் 12 மணிக்கு அவி கூடியதும், விலைவாசி உயர்வு உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை சபாநாயகர் ஏற்க மறுத்ததால் அவை முடங்கியது. தொடர் கூச்சல் குழப்பங்களால் இரு அவை நடவடிக்கைகளும் முடங்கிவிட்டன. இதனால் இரு அவைகளும் பகல் 2 மணி வரை முடங்கியது. நாடாளுமன்ற நடவடிக்கைகள் இன்று 11வது நாளாக முடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் தற்போது வரை, மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகள் , முக்கிய மசோதாக்கள் நிறைவேற்ற்ம் என எதுவும் நடபெறவில்லை..