பெங்களூர்: பெங்களூரின் முக்கிய இடங்களில் இருந்து கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு மெமு ரயில்கள் இன்று முதல் இயங்க உள்ளன.
இதன்மூலம் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் வேகமாக வெறும் ரூ.30 முதல் ரூ.35 செலவில் பொதுமக்கள் நகரின் பல்வேறு இடங்களில் இருந்து விமான நிலையத்துக்கு சென்றடைய முடியும்.
இந்தியாவின் சிலிக்கான வேலி என பெங்களூர் அழைக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் பெங்களூரில் குடியேறும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏறக்குறைய பெங்களூர் நகரின் மக்கள் தொகை என்பது ஒரு கோடியை தாண்டியுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்கள் பெங்களூரில் வசித்து வருகின்றனர். இதில் அதிகமானவர்கள் விமான பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக பெங்களூரில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது.
இருப்பினும் பரந்து விரிந்த பெங்களூரின் பல்வேறு இடங்களில் இருந்து விமான நிலையம் செல்வது என்பது பயணிகளுக்கு அவ்வளவு எளிதான காரியாக இருக்காது. இதற்கு பல்வேறு காரணங்களை கூறலாம். குறிப்பாக பெங்களூர் நகரில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசல், சாலைகளில் உள்ள பள்ளங்கள் ஆகியவை முக்கியமானதாகும். இதனால் பெரும் சிரமங்களை சந்தித்தே விமான நிலையங்கள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இத்தகைய பிரச்சனை நீண்டகாலம் நிலவி வரும் நிலையில் இதற்கு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதனடிப்படையில் தான் தற்போது பெங்களூரில் இருந்து கெம்பேகவுடா விமான நிலையத்துக்கு செல்லும் பயணிகளுக்கன நற்செய்தி ஒன்றை தென்மேற்கு ரயில்வே கூறியுள்ளது.
அதாவது பெங்களூர் நகரில் பல்வேறு இடங்களில் இருந்து பெங்களூர் கெம்பேகவுடா விமான நிலையத்துக்கு மெமு ரயில்கள் இன்று முதல் இயக்கப்பட உள்ளன. இதன்மூலம் விமான நிலையம் செல்லும் பயணிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் விரைவில் ரயில் மூலம் விமான நிலையத்தை செல்லலாம்.
அதனப்படையில் 5 மெமு ரயில்கள் பெங்களூர் நகரில் பல்வேறு இடங்களை பெங்களூர் விமான நிலையத்தை இணைக்க உள்ளன. 06531/06532 கேஎஸ்ஆர் பெங்களூர்-தேவனஹள்ளி, 06533/0634 தேவனஹள்ளி-எலகங்கா, 06535/06536 தேவனஹள்ளி-கண்டோன்மென்ட், 06537/06538 தேவனஹள்ளி-கண்டோன்மென்ட், 06539/06510 தேவனஹள்ளி-எலகங்கா இடையே மெமு ரயில்கள் இயங்க உள்ளன.
அதன்படி காலை 4.55 மணிக்கு கேஎஸ்ஆர் பெங்களூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் கேஎஸ்ஆர் பெங்களூர் தேவனஹள்ளி மெமு ரயில் (06531) காலை 6.20 மணிக்கு தேவனஹள்ளியை சென்றடையும். மறுமார்க்கமாக காலை 7.50 மணிக்கு தேவனஹள்ளியில் இருந்து புறப்படும் தேவனஹள்ளி-கேஎஸ்ஆர் பெங்களூர் மெமு ரயில் (06532) காலை 9.20 மணிக்கு கேஎஸ்ஆர் பெங்களூர் ரயில் நிலையத்தை வந்தடையும். இந்த ரயில்கள் பெங்களூர் கண்டோன்மென்ட், பையப்பனஹள்ளி, எலகங்கா, கெம்பேகவுடா சர்வேதேச விமான நிலையம் ஆகியவற்றின் வழியாக செல்லும்.
இதேபோல், பெங்களூர் தேவனஹள்ளியில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்படும் தேவனஹள்ளி-எலகங்கா மெமு ரயில் (06533) காலை 6.38 மணிக்கு பெங்களூர் கெம்பேகவுடா விமான நியைத்தையும், 7 மணிக்கு எலகங்காவையும் சென்றடையும். மறுமார்க்கமாக எலகங்காவில் இருந்து காலை 7.45 மணிக்கு புறப்படும் எலகங்கா-தேவனஹள்ளி மெமு ரயில் (06534) காலை 8.03 மணிக்கு பெங்களூர் விமான நிலையத்தை அடையும்.
மேலும் தேவனஹள்ளி-பெங்களூர் கண்டோன்மென்ட் மெமு ரயில் (06535) காலை 8.50 மணிக்கு தேவனஹள்ளியில் இருந்து புறப்பட்டு காலை காலை 10.10 மணிக்கு பெங்களூர் கண்டேனா்மென்ட் ரெயில் நிலையத்தை வந்தடையும். மறுமார்க்கமாக பெங்களூர் கண்டோன்மென்ட் -தேவனஹள்ளி மெமு ரயில் (06536) மதியம் 12.20 மணிக்கு கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மதியம் 1.40 மணிக்கு தேவனஹள்ளியை சென்றடையும். இநுர் ரயில்கள் பையப்பனஷள்ளி, எலகங்கா, பெங்களூர் கெம்பேகவுடா விமான நிலையம் வழியாக பயணத்தை மேற்கொள்ளும்.
மேலும் தேவனஹள்ளி-பெங்களூர் கண்டோன்மென்ட் மெமு ரயில் (06537) தேவனஹள்ளியில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு கெம்பேகவுடா விமான நிலையத்தை 2.07 மணிக்கு அடையும். அங்கிருந்து 2.08 மணிக்கு புறப்பட்டு எலகங்கா, பையப்பனஹள்ளி வழியாக 3.15 மணிக்கு பெங்களூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தை வந்தடையும். மறுமார்க்கமாக பெங்களூர் கண்டோன்மென்ட்டில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்படும் பெங்களூர் கண்டோன்மென்ட் -தேவனஹள்ளி மெமு ரயில் (06538) பையப்பனஹள்ளி, எலகங்கா வழியாக மாலை 4.55 மணிக்கு பெங்களூர் கெம்பேகவுடா விமான நிலையத்தை சென்றடையும். அங்கிருந்து 4.56 மணிக்கு புறப்பட்டு 5.25 மணிக்கு தேவனஹள்ளிக்கு செல்லும்.
இதுதவிர மாலை 5.50 மணிக்கு தேவனஹள்ளியில் இருந்து தேவனஹள்ளி-எலகங்கா மெமு ரயில் (06539) புறப்பட உள்ளது. இந்த ரயில் மாலை 6 மணிக்கு பெங்களூர் விமான நிலையத்தையும், 6.20 மணிக்கு எலங்காவையும் சென்றடைய உள்ளது. மறுமார்க்கமாக இரவு 7.15 மணிக்கு எலகங்காவில் இருந்து புறபப்டும் எலகங்கா -தேவனஹள்ளி மெமு ரயில் பெங்களூர் விமான நிலையத்தை 7.35 மணிக்கு அடைந்து 7.45 மணிக்க தேவனஹள்ளியை சென்றடைய உள்ளது.
முன்னதாக அதிகாலை 3.15 மணிக்கு சர் எம் விஸ்வேஸ்வரய்யா டெர்மினலில்(விமான நிலைய சரக்கு முனையம்) இருந்து சர் எம் விஸ்வேஸ்வரய்யா டெர்மினல் -கேஎஸ்ஆர் பெங்களூர் மெமு ரயில் (06523) புறப்பட்டு அதிகாலை 3.40 மணிக்கு பெங்களூர் கண்டோன்மென்ட் வந்து 4 மணிக்கு கேஎஸ்ஆர் பெங்களூரை அடைகிறது. மறுமார்க்கமாக காலை 9.30 மணிக்கு கேஎஸ்ஆர் பெங்களூரில் இருந்து புறப்படும் கேஎஸ்ஆர் பெங்களூர்-சர் எம் விஸ்வேஸ்வரய்யா டெர்மினல் மெமு ரயில் காலை 9.0 மணிக்கு கண்டோன்மென்ட் சென்று காலை 10.05 மணிக்கு சர் எம் விஸ்வேஸ்வரய்யா டெர்மினலை சென்றடைய உள்ளது.
அதோடு இந்த ரயில்களில் டிக்கெட் கட்டணம் ரூ.30 முதல் ரூ.35 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெங்களூர் விமான நிலையத்துக்கு பிஎம்டிசி வாயு வஜ்ரா பஸ்களில் டிக்கெட் கட்டணமாக ரூ.230ம் , வாடகை கார்களின் கட்டணம் ரூ.600 ஆகவும் உள்ள நிலையில் தான் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் விமான நிலையம் செல்லும் பயணிகளுக்கான டிக்கெட் கட்டணமும் பல மடங்கு குறைய உள்ளது என்பது இன்னும் சிறப்பானதாகும்.