கோவை மாநகர கோலீஸ் கமிஷனராக பாலகிருஷ்ணன் பொருப்பேற்றது முதல் பல்வேறு களப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக சாலை போக்குவரத்து குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடம் கலந்துரையாடினார். அதே போல பள்ளி கல்லூரி உரிமையாளர்களுடன் கலந்துறையாடல், மக்கள் குறை தீர்ப்பு முகாம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக கோவை மாநகரில் உள்ள லாட்ஜ், ஓட்டல் உரிமையாளர்களை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். அப்போது ஓட்டகள் மற்றும் லாட்ஜ் உரிமையாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புகள் குறித்து விளக்கினார். அதே போல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதை லாட்ஜ் மற்றும் ஓட்டல்கள் உறுதிபடுத்த வேண்டும், கட்டாயமாக அனைத்து லாட்ஜ், ஓட்டல்களில் சி.சி.டி.வி காமிராக்களை பொருத்த வேண்டும், அவ்வாறு பொருத்தாமல் இருப்போர் உரிமங்கள் ரத்து செய்யும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
லாட்ஜ்களில் தங்கும் நபர்கள் குறித்த விவரங்கள், அடையாள அட்டைகளுடன் 24 மணி நேரத்திற்குள் அந்தந்த எல்லைக்குள் இருக்கும் போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கவேண்டும். யார் எதற்காக தங்கியிருக்கிறார்கள், வெளிநாட்டினர் தங்கியிருந்தால் அவர்களின் பாஸ்போர்ட், விசா விவரங்களை பெறவேண்டும்.
சந்தேக நபர்களாக இருந்தால் போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும். லாட்ஜ்களில் விபசாரம் நடத்த அனுமதிக்க கூடாது. விதிமுறைப்படி பொது மக்களை ஓட்டல்களில் தங்குவதற்கு அனுமதிக்கவேண்டும். ஓட்டல்களில் முறைகேடாக மதுபானம் விற்பனை செய்யக்கூடாது.
குற்ற செயல்களில் நடப்பதாக தெரியவந்தால் சட்ட விதிமுறைகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். போலீசார் அடிக்கடி லாட்ஜ், ஓட்டல்களில் சோதனை நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0