மத்திய உணவு பாதுகாப்பு துறை அமைச்சகம் சார்பாக ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் நாடு முழுவதும் இருக்க கூடிய முக்கியமான சமையல் எண்ணெய் உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனங்களை சேர்ந்தவர்களும் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
கடந்த மாதம் சமையல் எண்ணெய் 10 முதல் 15 ரூபாய் வரை விலை குறைப்பு செய்யப்பட்டிருந்தது. வரும் காலங்களிலும் இதன் விலை இன்னும் குறையும் என்று எதிர்பாக்கப்படுகிறது.
அடுத்த ஒரு வாரத்திற்குள் தற்போது இருக்க கூடிய எண்ணெய் விலையில் இருந்து பெரிய அளவிலான விலை குறைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று உற்பத்தியாளர்களையும் , விற்பனையாளர்களையும் ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.