நாகர்கோவில் காசியின் செல்போன் மற்றும் லேப்டாப்பில் 19 நிர்வான புகைப்படங்கள், 400 ஆபாச வீடியோக்கள் இருந்ததாக போலீசார் அறிக்கை தாக்கல் செய்ததை பார்த்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்.
மேலும், இந்த வழக்கில் 120 பெண்கள் பாதிக்கப்பட்ட நிலையில், இன்னும் பல சாட்சிகளை விசாரணை செய்ய வேண்டிய உள்ளதால், காசியின் தந்தை தங்கபாண்டியனுக்கு ஜாமின் வழங்க முடியாது என்றும், அவருக்கு ஜாமின் வழங்கினால் இந்த வழக்கு விசாரணையை பாதிக்கும் என்று கூறி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி உத்தரவு பிறக்கத்துள்ளார்.
நாகர்கோலை சேர்ந்த காசி என்பவன், ஆசை வார்த்தை கூறி தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பெண்களை சமூக சமூக வலைத்தளம் மூலம் ஏமாற்றி, அவர்களை ஆபாசமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து விரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டான்.
இந்த நாடகக் காதலனிடம் சிக்கிய சில பெண்கள் புகார் அளிக்கவே, இந்த விவரங்கள் அனைத்தும் வெளியாகிறது. இந்த வழக்கில் காசியின் தந்தை தங்கபாண்டியன் ஜாமீன் கூறி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
அப்போது போலீசார் தரப்பில் நாகர்கோவில் காசியின் செல்போன் மற்றும் லேப்டாப்பில் 1900 நிர்வான புகைப்படங்களும், 400 ஆபாச வீடியோக்களும் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த வீடியோக்கள் மற்றும் நிர்வாண படங்களை அழிப்பதற்கு காசியின் தந்தை தங்கபாண்டியன் உதவி ஆக இருந்ததாக அறிக்கைகள் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனை பார்த்த நீதிபதி கடும் அதிர்ச்சியாகி, இவருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் 120 பெண்களின் பலரிடம் இன்னும் சாட்சியதுக்கான விசாரணை நடந்து கொண்டு வருகிறது. எனவே இவர் ஜாமின் மனைவி தள்ளுபடி செய்வதாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.