கோவை நியூசித்தாபுதூர் சின்னசாமி நாயுடு வீதியை சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவர் கோவை மத்திய அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியராக நான் கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். கடந்த 2017-ம் ஆண்டு கோவையை சேர்ந்த கோபி (32) என்பவர் எனக்கு பேஸ்புக் மூலமாக அறிமுகமானார். இருவரும் நண்பர்களாக பழகி வந்தோம். பின்னர் இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு அடிக்கடி பேசி வந்தோம். நாளடைவில் அது எங்களுக்குள் காதலாக மாறியது. அவர் என்னை திருமணம் செய்வதாக உறுதி அளித்தார். அவரது பேச்சை உண்மை என நம்பினேன். இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு எனது வீட்டிற்கு அவர் வந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் அவர் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என ஆசைவார்த்தை கூறி என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்.
அதேபோன்று அடிக்கடி தனிமையில் இருவரும் சந்தித்து வந்தோம். பின்னர் நான் அவரிடம் திருமணம் செய்து கொள்ளளாம் என்றேன். அன்று முதல் அவர் என்னிடம் பேசுவதை தவிர்த்து விட்டார். என்னுடனான தொடர்பை கைவிட்டார்.
எனவே திருமணம் செய்வதாக உறுதி அளித்து என்னை பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றிய கோபி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அந்த புகாரில் தெரிவித்திருந்தார். புகாரின் பேரில் போலீசார் கோபி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.