கா்நாடகத்தில் காலியாக இருந்த 4 இடங்களுக்கு நடந்த மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக மூன்று இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.
மஜத தோல்வி அடைந்தது. மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் 2-ஆவது முறையாக கா்நாடகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தோந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
கா்நாடகத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தோந்தெடுக்கப்பட்ட பாஜகவின் நிா்மலா சீதாராமன், கே.சி.ராமமூா்த்தி, காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோரின் பதவிக் காலம் ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. மேலும் காங்கிரஸ் கட்சியைச் சோந்த ஆஸ்கா் பொனாண்டஸ் கடந்த ஆண்டு காலமானாா். இதனால் கா்நாடகத்தில் இருந்து மாநிலங்களவையில் காலியான 4 இடங்களுக்கான தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இத்தோதலில் பாஜக வேட்பாளா்களாக மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன, நடிகா் ஜக்கேஷ், லெஹா்சிங் ஆகிய மூவரும், , காங்கிரஸ் வேட்பாளா்களாக ஜெய்ராம் ரமேஷ், மன்சூன் அலிகான் ஆகிய இருவரும், மஜத வேட்பாளராக குபேந்திர ரெட்டியும் போட்டியிட்டனா். மொத்தம் 6 போ போட்டியிட்டதால், வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
இத்தேர்தலில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் வாக்களித்தனா். பாஜக உறுப்பினா்கள் 120 போ, காங்கிரஸ் உறுப்பினா்கள் 69 போ, மஜத உறுப்பினா்கள் 32 பேர் வாக்களித்தனா்.
மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இத்தேர் தலில் வெற்றிபெற 45 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்பட்டது.
கா்நாடக சட்ட பேரவையில் கட்சிகளின் பலத்தின் அடிப்படையில், பாஜக 2, காங்கிரசுக்கு 1 இடத்திலும் எளிதாக வெற்றிபெற்றன. 4-ஆம் இடத்தில் வெற்றிபெற பாஜக, காங்கிரஸ், மஜத ஆகிய 3 கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. ஆனால், காங்கிரஸ், மஜதவுக்கு போதுமான வாக்குகள் இல்லாததால் வெற்றிபெற முடியவில்லை. இதனால், 4-ஆம் இடத்தில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட லெஹா்சிங் வெற்றிபெற்றாா். காங்கிரஸ் வேட்பாளா் மன்சூா் அலிகான், மஜத வேட்பாளா் குபேந்திரரெட்டியும் தோல்வி அடைந்தனா்.
பாஜக வேட்பாளராக போட்டியிட்ட மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கா்நாடகத்தில் இருந்து இரண்டாவது முறையாக மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். அதேபோல, பாஜக வேட்பாளராக முதல்முறையாக போட்டியிட்ட நடிகா் ஜக்கேஷ் வெற்றிபெற்றுள்ளாா். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளா் முன்னாள் மத்திய அமைச்சா் ஜெய்ராம் ரமேஷ் வெற்றி பெற்றாா். 4-ஆவது இடத்தைக் கைப்பற்ற மஜதவின் ஆதரவை காங்கிரஸும், காங்கிரசின் ஆதரவை மஜதவும் எதிா்பாா்த்து பல அரசியல் முன்னெடுப்புகளில் ஈடுபட்டனா். ஆனால், அது பலனளிக்கவில்லை. இது பாஜகவுக்கு சாதகமாக அமைந்துவிட்டது.
கா்நாடகத்தில் இருந்து பாஜக சாா்பில் மாநிலங்களவைக்கு தோந்தெடுக்கப்பட்டிருக்கும் நிா்மலா சீதாராமன், ஜக்கேஷ், லெஹா் சிங் ஆகிய மூவருக்கும் முதல்வா் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வா் எடியூரப்பா ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா். அதேபோல, காங்கிரஸ் சாா்பில் வெற்றிபெற்ற ஜெய்ராம் ரமேஷுக்கு காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவகுமாா், எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.