புதுக்கோட்டை: அதிராம்பட்டினம் மீனவர்கள் வலையில் சிக்கிய கஞ்சா முட்டைகள், தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கத்தை தடுக்க ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0 என்ற பெயரில் ஒரு மாத சோதனையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதனால் கஞ்சா கடத்தல் கும்பல் பல்வேறு நுதன முறைகளை கையாண்டு கஞ்சா கடத்தல்.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஏரி புறக்கரையை சேர்ந்த 4 மீனவர்கள் நேற்று நாடடு படகில் மீன் பிடிக்க சென்றுள்ளனர் அப்போது மூன்று பாகத்தில் மீன் பிடித்து கொண்டியிருந்தனர் அப்போது அவர்களது வலையில் 5 மூட்டைகள் சிக்கின அதில் விலையுர்ந்த பொருட்கள் இருக்கலாம் என ஆர்வத்துடன் கரை திரும்பிய மீனவர்கள் மூட்டையை பிரித்து பார்த்த போது அதிர்ச்சி காத்து இருந்தது. அதில் 160 கிலோ எடையுள்ள ,சுமார் 25 லட்சம் மதிப்புள்ள கஞ்சா இருந்ததது. இதையடுத்து அதிராம்பட்டினம் காவல்நிலையத்துக்கு அந்த மீனவர்கள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற கடலோட காவல்துறை, போதைபொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவினர் 5 மூட்டை கஞ்சாவையும் காவல் நிலையத்துக்கு எடுத்து சென்றனர்.
இது தொடர்பாக காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கஞ்சா கடத்தலை தடுக்க தமிழ்நாடு முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருவதால் கடல் மார்கமாக கடத்தல் கும்பல் கஞ்சாவை கடத்தி இருக்காலம் என சந்தேகின்றனர். கடத்தலின் போது கடலோர காவல்படை ரோந்து சென்றிருக்கலாம் அவர்களிடம் சிக்காமல் இருக்க கஞ்சா மூட்டையை கடலில் வீசி இருக்கலாம் என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து வழக்கு பதிவு செய்து கஞ்சா மூட்டைகளை கடத்தியது யார் எங்கிருந்து எங்கு கடத்தி சென்றார்கள் என்று கடலோர காவல்துறையினரும் போதைபொருள்தடுப்பு நுன்னறிவு பிரிவினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்குள் கஞ்சா வருவதை தடுக்க அணைத்து எல்லைகளிலும் கூடுதல் சோதனைசாவடிகள் அமைத்து சோதனை தீவிர படுத்தபட்டுள்ளது மேலும் சாலை மார்க்கமாக கஞ்சா கடத்துவதை தடுக்க போலீசார் தீவிர வாகன சோதனை உள்ளிட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் பேருந்து, ரயில், காய்கறி வாகனம், இருசக்கர வாகனம், உணவு டெலிவரி பைகள், சொகுசு கார்கள் என பல்வேறு வகைகளில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வருபவர்கள் சிக்கி வருகின்றனர். இந்நிலையில் கடல் மார்க்கத்தை கஞ்சா கடத்தல் கும்பல் பயன்படுத்த தொடங்கியுள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.