ஆசை வார்த்தை காட்டி ரூ.47.40 லட்சம் ஆன்லைன் மோசடி – ராஜஸ்தான் வாலிபர் கைது..!

கோவையில் ஆன்லைன் மோசடி கும்பலின்கைவரிசை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கோவையைச் சேர்ந்த ஒருவருக்கு ஆன்லைனில்முதலீடு செய்தால் அதிக லாபம் பெற்று தருவதாக செல்போனில் ஒரு ‘மெசேஜ் ” வந்தது இதனை நம்பி அவர் அந்த குறுந் தகவலுடன் வந்த செயலியை பதிவிறக்கம் செய்து அந்த செயலியின் மூலம் ரூ. 47 லட்சத்து 40 ஆயிரத்தை முதலீடு செய்தார். பின்னர் அவர் முதலீடு செய்த தொகையோ, லாபத்தோகையோ திரும்ப பெற முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டது அறிந்த அவர் இதுகுறித்து கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அருண் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார் அதில் மோசடி ஆசாமி ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து கைவரிசை காட்டியது தெரியவந்தது. இதை தொடர்ந்து தனிப்படை போலீசார் ராஜஸ்தான் சென்று ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட நாகூர் பகுதியை சேர்ந்தசுரேந்திர திவால் ( வயது 23) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரு 18 லட்சத்து 19 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. மோசடிக்காக தொடங்கப்பட்ட 11 வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் மோசடி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது .இவர் பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்தது தெரியவந்தது. கைதான சுரேந்திர திவால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.