திருச்சி மாநகராட்சியில் 2025- 26 ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த பட்ஜெட் கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் கோ கு.அம்பிகாபதி, சி .அரவிந்தன் அனுசியா ரவிசங்கர் ஆகியோர் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர் .
பின்னர் 65 வது வார்டு கவுன்சிலர் , மாநகராட்சி அதிமுக குழுத்தலைவர் கோ.கு. அம்பிகாபதி, கவுன்சிலர் சி. அரவிந்தன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது
திருச்சி மாநகர மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருக்கும் போக்குவரத்து நெரிசலை போக்கும் உயர் மட்ட மேம்பாலங்கள், மெட்ரோ ரயில் போன்ற வளர்ச்சி திட்டங்கள் எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.
திருச்சி மாவட்டம் எதிர்காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சி அடைய உள்ளது ஆனால் அதற்கேற்ற திட்டங்களை கடந்த நான்கு ஆண்டுகளாக திருச்சி மாநகராட்சி செயல்படுத்தவில்லை
இதன் காரணமாக திருச்சியில் தொழில் வளர்ச்சி என்பது மந்தமாக உள்ளது. திருச்சியில் புதிதாக தொழில் தொடங்க யாரும் முன் வருவதில்லை.
திருச்சி மாநகராட்சி வளர்ச்சி அடையாததால் ஏற்கனவே செயல்பட்டு வந்த பெல் மற்றும் அதனை சார்ந்த தொழில்கள் நலிவடைந்து விட்டது.
அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த மத்திய, மாநில அரசுகளின் எந்தவிதமான மானியம் மற்றும் நிதி ஒதுக்கீடு இல்லாமல் மாநகராட்சி மக்களின் வரிப்பணத்தை மட்டுமே வைத்து இந்த நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்கள். மாநகராட்சியில் இருந்து வரக்கூடிய வருவாய் அனைத்தையும் பஞ்சப்பூர் புதிய பஸ் நிலையம் மற்றும் பஞ்சப்பூர்-கோணக்கரை சாலை போன்ற பணிகளுக்கு கொண்டு சென்று கவனம் செலுத்தப்படுகிறது. மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான எந்த ஒரு திட்டமும் இடம் பெறவில்லை.
கடந்த ஆண்டு பட்ஜெட் சுமார் 2,000 கோடி ரூபாய் மதிப்பில் தயாரிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரவு செலவு அறிக்கையில், சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் மற்றும் செலவு ஆயிரம் கோடி ரூபாய் என கணக்கு காட்டி முடிக்கப்பட்டு, 105 கோடி ரூபாய் பற்றாக்குறை என கூறப்பட்டுள்ளது .
கடந்த ஆண்டில் திருச்சி மாநகராட்சியில் எவ்வித வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பது உறுதியாகிறது. எனவே இந்த பட்ஜெட் கூட்டத்தை எனவே இந்த பட்ஜெட் கூட்டத்தை நாங்கள் புறக்கணித்தோம். இவ்வாறு மாமன்ற உறுப்பினர்கள் அம்பிகாபதி அரவிந்தனும் கூறினார்கள். பேட்டியின் போது 37 வது வார்டு அதிமுக கவுன்சிலர் அனுசியா அருகில் உள்ளார் திருச்சி மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தை புறக்கணித்த அதிமுகவினர் தங்களது ஆதங்கத்தை தெரிவித்தன.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0