கோவை வியாபாரியிடம் அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறிப்பு – ஒருவர் கைது..!

கோவை சரவணம்பட்டி விசுவாசபுரம் கார்த்திக் நகரை சேர்ந்தவர் சங்கர் ( வயது 45 )இவர் சரவணம்பட்டி சத்தி ரோட்டில் பழக்கடை நடத்தி வருகிறார். நேற்று இவர் அங்குள்ள மருதம் நகர் ரோட்டில் நடந்து சென்றார் அப்போதுஅவருக்கு ஏற்கனவே அறிமுகமான மணியக்காரன்பாளையம், ரங்கநாதர் வீதியைச் சேர்ந்த சுரேஷ் என்ற மெடிக்கல் சுரேஷ் ( வயது 47) என்பவர் எதிர் திசையில் நடந்து வந்தார்.. அவ ர் சங்கரை வழிமறித்து எனக்கு அவசர தேவைக்கு ரூ 1 லட்சம் கொடு என்று கேட்டார்.சங்கர் என்னிடம் பணம் இல்லை என்றார். இதனால் ஆத்திரமடைந்த அவர்மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சங்கரை மிரட்டி அவரிடம் இருந்த 500 ரூபாயை பறித்து விட்டு தப்பி ஓடி விட்டார்.இதுகுறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் தினேஷ் குமார் வழக்கு பதிவு செய்து சுரேஷ் என்ற மெடிக்கல் சுரேசை கைது செய்தார். இவர் மீது 3பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.