கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் விளாங்குறிச்சி மெயின் ரோட்டை சேர்ந்தவர் சத்ய ராணி (வயது 36) இவர் நேற்று விளாங் குறிச்சி ரோடு -உப்பிலிபாளையம் சந்திப்பில் நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த 2 ஆசாமிகள் அவரது கழுத்தில் கிடந்த ஒரு பவுன் தங்கச் செயினை பறித்து விட்டு தப்பி சென்று விட்டனர் .இதேபோல கரூர் மாவட்டம் குளித்தலை பக்கம் உள்ள தோகை மலையைச் சேர்ந்தவர் தினேஷ் குமார். இவரது மனைவி திவ்யா ( வயது 28) இவர் சிங்காநல்லூரில் நடந்த உறவினர் இல்ல திருமண விழாவில் பங்கேற்க வந்திருந்தார் திருச்சி ரோட்டில் உள்ள திருமண மண்டபம் முன்தனது குழந்தையுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக நடந்து வந்த ஒரு ஆசாமிதிடீரென்று இவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் செயினை பறித்து விட்டு தப்பி சென்று விட்டார். இதுகுறித்து திவ்யா சிங்கநல்லூர் போலீசில் புகார் செய்துள்ளார்போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்..சிங்காநல்லூரில் ஒரே நாளில் 2 பெண்களிடம் நடந்த இந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0