கோவை வழியாக பல்வேறு பகுதிகளுக்கு தினமும் ஏராளமான ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது . இதன் காரணமாக கோவை ரயில் நிலையத்தில் எப்போதும் பயணிகளும் கூட்டம் அதிகமாகவே இருக்கும் .இந்த நிலையில் கேரளாவில் இருந்து திருப்பதிக்கு செல்லும் சிறப்பு ரயில் சம்பவத்தன்று இரவு 9 – 45 மணிக்கு கோவை வந்தது. பின்னர் அந்த ரயில் மீண்டும் கோவையில் இருந்து புறப்பட்டு சென்றது .அந்த ரயில் பீளமேடு நிலையத்துக்கும்,சிங்காநல்லூர் ரயில் நிலையத்துக்கும் இடையே சென்றபோது மறுபுறம் உள்ள தண்டவாளத்தில் பெரிய அளவிலான கல் வைக்கப்பட்டு இருந்தது. அதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த இன்ஜின் டிரைவர் உடனடியாக கோவை ரயில் நிலைய இயக்குனருக்கும், சேலம் ரயில்வே கோட்ட கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இதை யடுத்துக் கோவை ரயில்வே பாதுகாப்பு படைமற்றும் ரயில் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மற்றும் ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போதுபீளமேடு ரயில் நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் தண்டவாளத்தில் 2 அடி நீளம் 2 அடி அகலம் உள்ள கான்கிரீட் கல் இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக அந்த கல்லை அகற்றினர். பின்னர் அந்த கல்லை அங்கு வைத்தது யார்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளதா? என்பது குறித்தும் சோதனை செய்தனர். கேமராக்கள் எதுவும் இல்லை. இதனால்பீளமேடு ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் இரவு நேரத்தில் 2 பேர் தண்டவாள த்தில் நடந்து சென்றது பதிவாகி இருந்தது.. அந்த நபர்கள் யார்? என கண்டறிய ரயில்வே போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தினர் .அதில் அவர்கள் கோவை பீளமேடு தண்ணீர் பந்தலை சேர்ந்த திருமூர்த்தி ( வயது 48) நீலகிரி மாவட்டம் கோடநாடு பகுதியைச் சேர்ந்த விஜய் ( வயது 34) என்பது தெரிய வந்தது .இந்த நிலையில்பீளமேடு ரயில் நிலையம் அருகே சுற்றித் திரிந்த 2 பேரை பிடித்துவிசாரணை நடத்தினர். அதில் அவர்கள் திருமூர்த்தி, விஜய் என்பதும் தண்ட வாளத்தில் கல் வைத்தவர்கள் என்பதும் தெரிய வந்தது.அவர் 2 பேரும் தண்டவாளம் பகுதியில் உள்ள இரும்புகளை திருடி விற்று வந்ததும் சம்பவத்தன்று இரும்புடன் இருந்த கான்கிரீட் கல்லை ரயில் தண்டவாளத்தில் உடைக்க வைத்து சென்றதும் தெரிய வந்தது. இருந்தபோதிலும் அவர்கள் கூறியதில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவர்கள் தண்டவாளத்தில் கல்லை வைத்து ரயிலை கவிழ்த்து சதி செய்தார்களா? இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் தண்டவாளத்தில் அவர்கள் 2 இடங்களில் சிறிய கற்களை வைத்ததும் தெரிய வந்தது. இரவு 10 – 30 மணியிலிருந்து தொடர்ச்சியாக 3 ரயில் அந்த வழியாக செல்லும்.ஆனால் அதற்குள் தண்டவாளத்தில் இருந்த கல்கள் கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டு விட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0