வியாபாரிகள் சங்க தலைவரை இரவில் நடுவழியில் இறக்கிவிட்ட பஸ் நிறுவனத்துக்கு அபராதம்.

கோவையை சேர்ந்த பிரபல வரத்தகரும்,தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோவை மாவட்ட தலைவர் ஜி.இருதய ராஜா.இவர் கடந்த 26 – 8 – 2023 -அன்று தனது சொந்த ஊருக்கு செல்வதற் காக தனியார் ஆம்னி பேருந்தில் பயணம் செய்தார்.இதற்காக கோவையில் இருந்து குரும்பூருக்கு “ரெட் பஸ் ” ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார்.இணையதளத்திலும் ‘ குரும்பூர் பஸ் ஸ்டாப் பெயர் இடம் பெற்றுள்ளது.இந்த நிலையில் அதிகாலை 4 மணி அளவில்அந்த ஆம்னி பேருந்து தூத்துக்குடி – திருச்செந்தூர் ரோட்டில் உள்ள ஆறுமுகநேரி தாரங்கதார கெமிக்கல்ஸ் (டி.சி டபுள்யூ), பஸ் நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்தி இறங்கச் செய்துவிட்டார்.இந்த பஸ் குரும்பூருக்கு போகாது என்று கூறிவிட்டார். நான்.குரும்பூருக்கு முன்பதிவு செய்து உள்ளேன்?அதற்கான பணத்தை வாங்கி உள்ளீர்கள். ஏன் நடுவழியில் என்னை இறக்குகிறீர்கள்?என்று கேட்டேன். குறும்பூருக்கு இங்கிருந்து இறங்கி நடந்து செல்லுங்கள் என்று கூறிவிட்டார்.குரும்பூர் இந்த இடத்திலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த நிலையில் என்ன செய்வது என்று தெரியாது தவித்த நான். வேறு ஒரு வாகனம் ஏற்பாடு செய்து என் சொந்த ஊருக்கு சென்றேன். இந்த சம்பவம் எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது.மேலும் குரும்பூர் பஸ் ஸ்டாப் என்று இணையதளத்தில் பதிவிட்டு விட்டு நான் முன்பதிவு செய்த பிறகு குறும்பூர் பஸ் நிறுத்தம் இல்லை என்று கூறுவது மிகப்பெரிய மோசடியாகும். எனக்கு ஏற்பட்ட நிலை தனியாக ஒரு பெண் வந்தால் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டால்எப்படி இருக்கும்.என்று கூறினார். இதை பஸ் கண்டக்டர் கண்டு கொள்ளவில்லை. இது தொடர்பாக கோவைமாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்டது..இந்த வழக்கில் வியாபாரிகள் சங்கத் தலைவர் இருதய ராஜா சார்பில் வழக்கறிஞர் நம்பிக்கை டோமினிக்ஆஜராகி இந்த வழக்கை நடத்தினார்..இந்த வழக்கில் நுகர்வோர் ஆணையம் தீர்ப்பு வழங்கியது. இதன்படி குற்றம் சாட்டப்பட்ட ” ரெட் பஸ் ” நிறுவனம் ரூ.15 ஆயிரம்நஷ்ட ஈடு வழங்க கோரி தீர்ப்பு வழங்கினார். .இதற்கான வரைவோலை இருதயராஜாவிடம் இன்று வழங்கப்பட்டது.