கோவை மாநகரில் 378 போலீசார் திடீர் இடமாற்றம். கமிஷனர் சரவண சுந்தர் அதிரடி உத்தரவு

கோவை மாநகர காவல் துறையில்காட்டூர், ரேஸ்கோர்ஸ், பீளமேடு ராமநாதபுரம் ,உக்கடம் போத்தனூர், சிங்காநல்லூர், சாய்பாபா காலனி, கவுண்டம்பாளையம் சுந்தராபுரம் உள்ளிட்ட 20 காவல் நிலையங்கள் உள்ளன .இது தவிர போக்குவரத்து புலனாய்வு பிரிவு, போக்குவரத்து பிரிவு மகளிர் காவல் நிலையங்களும் உள்ளன. இந்த நிலையில் ஒரே போலீஸ்நிலையத்தில் 3 ஆண்டு களுக்கு மேல் பணியாற்றியது, விருப்ப இடமாற்றம் கேட்ட சப் இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் போலீசார் என மொத்தம் 378 பேரை போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் நேற்று திடீர் இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தார். இடமாற்றம் செய்யப்பட்ட போலீசார் உடனடியாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட காவல் நிலையங்களுக்கு உடனடியாக சென்று பணியாற்ற வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கு.றிப்பிடப்பட்டுள்ளது.