உதகை; துணை இயக்குநர், முதுமலை புலிகள் காப்பகம், உதகை கோட்டம் அவர்களது தலைமை யில், அரசு சாரா நிறுவன உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதி மற்றும் வனப்பணியாளர்கள் முன்னிலை யில் முதுமலை புலிகள் காப்பாக வனக் கால்நடை உதவி மருத்துவர் ராஜேஷ்குமார், வயநாடு வனக்கால்நடை உதவி மருத்துவர் அஜேஷ் மோகன்தாஸ், மாயார் கால்நடை உதவி மருத்துவர் இந்துஜா அடங்கிய மருத்துவ குழுவினரால் இறந்த புலியின் பிரேதத்திற்கு உடற் கூராய்வு மேற் கொள்ளப்பட்டது. பிரேத பரிசோதனையில் இறந்தது சுமார் பத்து வயதுடைய ஆண் புலி. புலியின் உடலில் வேறொரு புலி தாக்கியதற்கான காயங்கள் இருந்தன. தலைப்பகுதியில் எலும்பு முறிவு காணப்பட்டது. மேற்கண்ட தடயங்கள் வேறொரு புலியுடன் சண்டையிட்டு இறந்திருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. தடவியல் ஆய்விற்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மற்ற உடற் பாகங்கள் அனைத்தும் சம்பவ இடத்திலேயே எரியூட்டப்பட்டு, சாம்பல் ஆகும்வரை உடன் இருந்து பணிகளை முற்றிலும் முறையாக செய்யப்பட்டு அதற்கான விளக்கங்கள் ஒப்படைக்கப்பட்டன,.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0