கோவையில் 2 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது.

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில் பெரியநாயக்கன் பாளையம் காவல் நிலைய போலீசார் நேற்றுமத்தம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகேதிடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பைதர் மாஜி மகன்கிரிதாரி மாஜி(வயது39), மற்றும் பெட்டதாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜோசப் மகன் பாலகிருஷ்ணன் அந்தோணி(வயது36) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா மற்றும் இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.