கோவை ரயில் நிலையத்தில் 1, 2, 3, மற்றும் 4 -வது பிளாட்பாரத்திற்கு பயணிகள் செல்ல ஏற்கனவே ” லிப்ட் ” வசதிகள் உள்ளது. இந்த நிலையில் 5 மற்றும் 6வது பிளாட்பாரத்திற்கு பயணிகள் செல்வதற்கு வசதியாக புதிதாக ரூ.30 லட்சம் செலவில் லிப்ட் வசதி செய்யப்பட்டுள்ளது. இதனை கோவை ரயில் நிலைய அதிகாரிகள் நேற்று தொடங்கி வைத்தனர். இந்த லிப்ட் முதியோர்கள் மற்றும் மாற்றுத்தி றனாளிகள் ரயிலில் இருந்து இறங்கி செல்ல உதவியாக அமைந்துள்ளது. இதற்காக ரயில்வே பயணிகள் சங்கத்தினர் ரயில்வே துறைக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0