சீமானின் வழக்கை உச்சநீதிமன்றத்தில் கையாண்ட அந்த வழக்கறிஞர் யார்?

டிகை அளித்த பாலியல் வழக்கில் சீமானுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பிரபல வழக்கறிஞர் நிர்ணமேஷ் துபே சீமானுக்காக ஆஜராகி வாதாடினார். தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், சீமானின் மாறுபட்ட பேச்சு குறித்து விமர்சித்த நடிகை தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், சீமான் மீது நடிகை அளித்த பாலியல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது சீமானுக்கு கிடைத்த மிகப்பெரிய நிவாரணமாக பார்க்கப்படுகிறது. ஆனால் சீமான் வழக்கில் அவரின் வழக்கறிஞரின் வாதம் முக்கிய காரணமாக உள்ளது. வடஇந்தியாவில் பிரபலமாக உள்ள வழக்கறி ஞரை இந்த வழக்கில் சேர்த்ததன் மூலம், சீமான் வழக்கின் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். சீமான் வழக்கில் நீதிபதி பி.வி. நாகரத்னா மற்றும் சதீஷ் சந்திரா ஷர்மா ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில், மிக முக்கியமான வழக்கறிஞரான நிர்ணமேஷ் துபே சீமானுக்கு ஆதரவாக ஆஜராகி வாதாடினார். அவர் முன்னர், அர்னாப் கோஸ்வாமி வழக்கிலும், கிரிக்கெட் லீக் அணியின் வழக்கிலும், பாஜக வழக்குகளிலும் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தவர். வட இந்தியாவின் முக்கியமான வழக்கறிஞர்களில் ஒருவராகவும் இருக்கிறார். அதிக கட்டணம் வாங்கும் வழக்கறிஞர்களில் இவரும் ஒருவர். இவர் தான் அர்னாப் கோஸ்வாமிக்கு ஜாமீன் வாங்கி கொடுத்தார்.பாலியல் குற்ற வழக்கில், அதன் தீவிரத்தை கருத்தில் கொண்டு, அந்த புகாரை தன்னிச்சையாக திரும்ப பெற முடியாது என்று கூறி, சீமான் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நடிகை அளித்த புகாரின் அடிப்படையில், சினிமா துறையில் ஏற்பட்ட குடும்ப பிரச்சினைகளால், நடிகை மற்றும் சீமான் இடையே தொடர்பு ஏற்பட்டது என்றும், திருமணம் செய்வதாக கூறி, தன்னை அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை புகாரில் தெரிவித்துள்ளதாக நீதிபதி குறிப்பிட்டு ள்ளார்.மேலும், நடிகை சீமான் மீது அளித்த புகாரில், அவர் ஆறு ஏழு முறை கருக்கலைப்பு செய்ததாகவும், விஜயலட்சுமியிடம் பெரும் தொகையை பெற்றதாகவும் கூறியுள்ளார். அரசியல் அழுத்தம் காரணமாக, சீமான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மன உளைச்சல் காரணமாக புகாரை திரும்பப் பெற நடிகை கடிதம் அனுப்பியதாகவும், இவை அனைத்தும் மிரட்டல் காரணமாக புகாரை திரும்ப பெற்றதாக நீதிபதி கூறியுள்ளார். பாலியல் வன்கொடுமை தொடர்பான புகாரின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, அந்த வழக்கு தன்னிச்சையாக திரும்ப பெற முடியாது என நீதிபதி தெரிவித்து, சீமான் மீது பரிந்துரைக்கப்பட்ட வழக்கு ரத்துசெய்யாததால், வழக்கு தள்ளுபடி செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார். உச்ச நீதிமன்றம் இந்த விசாரணைக்கே இடைக்கால தடை விதித்துள்ளது.