கோவையில் கோனியம்மன் கோவில் தேரோட்டம். 24 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.

கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை பெரிய கடை வீதியில் உள்ள கோனியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு கோவை ராஜவீதி துணி வணிகர் சங்க பெண்கள் பள்ளி, வீராசாமி முதலியார் உயர்நிலைப்பள்ளி, புனித மைக்கேல் மேல்நிலைப்பள்ளி, சௌடேஸ்வரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எஸ். பி. ஓ. ஏ. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புனித பிரான்சிஸ் மகளிர் உயர்நிலைப்பள்ளி உட்பட 24 பள்ளிக்கூடங்களுக்கு இன்று (புதன்)விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வு எவ்வித மாற்றமின்றி இன்று ( புதன்கிழமை) தொடங்கி நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.