வேலுமணி இல்ல திருமணம்: எடப்பாடி ஆப்சன்ட்…தமிழிசை, எல்.முருகனுடன் அண்ணாமலை பிரசன்ட்!

கோவை அதிமுக நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான எஸ். பி. வேலுமணி மகன் விஜய் விகாஸ் – தீக்‌ஷனா திருமணம் கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் பல்வேறு கட்சி அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், திரை பிரபலங்கள் பங்கேற்றனர். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், குஷ்பூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக நேற்று இரவு நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கலந்து கொண்டார். வேலுமணி பாஜவுடன் நெருக்கமாக இருக்கிறார் என்ற விமர்சனம் உள்ள நிலையில், பாஜக பிரமுகர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிமுக-வில் முன்னாள் அமைச்சர்கள் அனைவரிடமும் கைகுலுக்கி நலம் விசாரித்தார். ஆனால் இந்த நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவில்லை. வேலுமணி இல்ல திருமணம்வேலுமணி இல்ல திருமணம்வேலுமணி இல்ல திருமணம் அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமி வேலுமணி இல்ல திருமணம் மகன் மிதுன், நேற்றைய வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். சைலன்டாக தர்மயுத்தம் நடத்தி வரும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். வருகிற மார்ச் 10-ம் தேதி கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க இருப்பதாக அதிமுகவினர் கூறியுள்ளனர்.