கோவை மேம்பாலம் அடியில் ஒரு ஆண் பிணம்.

கோவை திருச்சி ரோட்டில் உள்ள மேம்பாலத்துக்கு அடியில் நேற்று ஒரு ஆண் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இது குறித்து புலிய குளம் கிராம நிர்வாக அதிகாரி சமயந்தி ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். இறந்தவருக்கு 50 வயது இருக்கும். அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை. இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.