கோனியம்மன் கோவில் தேரோட்டம். கோவையில் நாளை போக்குவரத்து மாற்றம்.

கோவை மாநகர போலீசார்வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது :- கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவில் தேரோட்டம் நாளை ( புதன்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு நடைபெறுகிறது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்புக்குகருதி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பேரூரிலிருந்து செட்டி வீதி, ராஜவீதி, வழியாக மாநகருக்குள் வரும் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக பேரூரில் இருந்து வரும் வாகனங்கள் செல்வபுரம் மாநகராட்சி பள்ளி அருகில் வலது புறமாக திரும்பி அசோக் நகர் ரவுண்டான , பேரூர் பைபாஸ் ரோடு வழியாக உக்கடம்செல்ல வேண்டும் .உக்கடம் பேரூர் பைபாஸ் ரோடு அசோக் நகர் ரவுண்டானா சிவாலய சந்திப்பு வழியாக செல்லலாம். மருதமலை ரோடு தடாகம் ரோட்டில் இருந்து தெலுங்கு வீதி வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக அந்த பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் தடாகம் சாலையில் இருந்து காந்தி பார்க் பொன்னைய ராஜபுரம், சொக்கம்புதூர் ராமமூர்த்தி சாலை சிவாலயாசந்திப்பு, செல்வபுரம் மாநகராட்சி பள்ளி வழியாக செல்லலாம்.உக்கடத்திலிருந்துஒப்பணக்கார வீதி வழியாக தடாகம் ரோடு ,மருதமலை ரோடு மேட்டுப்பாளையம் ரோடு செல்லும் வாகனங்கள் பேரூர் பைபாஸ் ரோடு அசோக் நகர் ரவுண்டான சிவாலய சந்திப்பு ராமமூர்த்தி சாலை சொக்கம்புதூர் பொன்னையராஜபுரம் வழியாக தடாகம் சாலையை அடைந்து செல்லலாம் சுக்கிரவார்பேட்டை சாலையிலிருந்து தியாகி குமரன் வீதி வழியாக ராஜவீதிக்கு வரும் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் நாளை காலை 8:00 மணி முதல் இரவு 10 மணி வரை நகருக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளைராஜவீதி ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி ஆகிய பகுதிகளில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை எந்த வாகனமும் நிறுத்த அனுமதி இல்லை. .இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் .மேலும் தேர் செல்லும்போது பட்டாசு மற்றும் வெடிகள் வெடிக்க கூடாது. பக்தர்கள் அதிக ஒலியை எழுப்பக்கூடிய ஊதுகோல்களை பயன்படுத்தக் கூட கூடாது. அனுமதிக்கப்பட்ட நபர்களை தவிர வேறு யாரும் பாதுகாப்பு வளையத்தை தாண்டி தேர் அருகே செல்ல கூடாது. அப்படி சென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.