கோவை; திருவண்ணாமலைமாவட்டம், வைப்பூர், திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 30 )பிளம்பர் . இவர் கோவை புதூரில் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார். இவருக்கு சில ஆண்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டார் . இதனால் அவர் மேகலா ( வயது 27 )என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்தார். அவர்கள் கோவை புதூரில் வசித்து வருகிறார்கள் .இந்த நிலையில் கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது .இதில் ஆத்திரம் அடைந்த கார்த்திகேயன் தனது மனைவியை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மேனகாஅளித்த புகாரின் பேரில் கோவை தெற்கு பகுதி அனைத்து மகளிர் போலீசார் நேற்று முன்தினம் கார்த்திகேயனை அழைத்து விசாரித்தனர். அப்போது மேகலா தனது கணவர் கார்த்திகேயனோடு சேர்ந்து வாழ தனக்கு விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார். ஆனால் போலீசார் 2 பேரையும் சமரசம் செய்ய முயன்றனர். இதில் மேகலா சமரசமாகவில்லை. இதனால் கார்த்திகேயன் நேற்று முன்தினம் மாலையில் தனது மோட்டார் சைக்கிளில். குனியமுத்தூர் காவல் நிலையத்துக்கு சென்றார் .அவர் அங்கிருந்து சப் இன்ஸ்பெக்டர் அழகுமாரி செல்வத்தை சந்தித்து என்னிடம் அடிக்கடி தகராறு செய்யும் தன் மனைவி மேகலா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார். போலீசார் கார்த்திகேயன் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் அவரை அலைக்கழித்தனர். ஏன் இப்படி செய்கிறீர்கள்? என்று அவர் கேட்டதற்கு போலீசார் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதனால் மனம் உடைந்த கார்த்திகேயன்காவல் நிலையத்தை விட்டு வேகமாக வெளியே வந்தார். பின்னர் அவர் தனது மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோலை ஒரு பாட்டில் பிடித்து தன் உடலில் ஊற்றினார். தீப்பெட்டி எடுத்து தீக்குளிக்க முயற்சி செய்தார். அதை பார்த்துஅதிர்ச்சி அடைந்த போலீசார் ஒடி சென்று கார்த்திகேயனிடம் இருந்த தீப்பெட்டி, மற்றும்பெட்ரோல் பாட்டிலை பறித்தனர். மேலும் அவரை மீட்டு முதல் சிகிச்சை அளித்தனர். இதை யடுத்து அவரைப்போலீசார் கைது செய்தனர்.அவர் மீது தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0