போதை மாத்திரைகளுடன் 2வாலிபர் கைது.

கோவை செல்வபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கஸ்தூரி, சப் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி ஆகியோர் நேற்று மாலை செல்வபுரம் ,அசோக் நகர், ரவுண்டானா பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 15 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் இவர்கள் செல்வபுரம், தெற்கு அவுசிங் யூனிட்டைசேர்ந்த முஸ்தபா மகன் நியூ பல் (வயது 24) ஆறுமுகம் மகன் பிரகதீஸ் என்ற பிரகாஷ் (வயது 24) என்பது தெரியவந்தது. இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.