சிறுத்தை தாக்கி 4 ஆடுகள் பலி. விவசாயிகள் பீதி.

கோவை தொண்டாமுத்தூர் பக்கம் உள்ள முத்திப்பாளையத்தை சேர்ந்தவர். தங்கம் விவசாயி. இவர் தனது தோட்டத்து வீட்டில் குடியிருந்து ஆடு ,மாடு மற்றும் கோழி வளர்த்து வருகிறார். நேற்று முன்தின இரவில் தங்கம் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அவருடைய வீட்டின் அருகே உள்ள பட்டியில் 12 ஆடுகள் அடைத்து வைத்திருந்தார். நேற்று அதிகாலை 4 மணி அளவில் பட்டியில் ஆடுகள் அலறும் சத்தம் கேட்டது .உடனே அவர் கதவை திறந்து வெளியே வந்து பார்த்தபோது ஆட்டு பட்டியலில் இருந்து சிறுத்தை ஒன்று குதித்து வெளியே ஓடியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பட்டிக்கு ஓடிச்சென்று பார்த்தார்.அங்கு 4ஆடுகள் கழுத்தில் கடிபட்ட நிலையில் இறந்து கிடந்தன. மேலும் 4 ஆடுகள் காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன. இது குறித்த தகவலின் பெயரில் வனத்துறையினர் – மற்றும் கால்நடை மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 4 ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தனர் அதில் 2 ஆடுகள் நிலைகவலைக்கிடமாக உள்ளது. சிறுத்தை தாக்கி ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் விவசாயிகள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.