கோவை ரேஸ்கோர்ஸ் மாசானிக் குழந்தைகள் மருத்துவமனையில் 3மாத குழந்தை திடீர் சாவு.

கோவை மாவட்டம் விளாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர்கள் மனோஜ் குமார், புவனேஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு குமரன் மருத்துவமனையில் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் அந்த குழந்தைக்கு குடல் சார்ந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. குழந்தைக்கு அறுவை சி‌கி‌ச்சை செய்தால் மட்டுமே காப்பாற்ற முடியும் என மருத்துவர்கள் கூறிய நிலையில், கடந்த செவ்வாய் கிழமை கோவை ரேஸ் கோர்சில் உள்ள மாசானிக் மருத்துவமனையில் தம்பதியினர் சேர்த்துள்ளனர். இந்த நிலையில்நேற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறி, நேற்று முன்தினம் இரவில் அதிக அளவில் குழந்தை க்கு ” இனிமா ” கொடுத்து ள்ளனர். குழந்தைக்கு சுமார் 50 முதல் 60 மில்லி அளிக்க வேண்டிய இனிமாவை, பயிற்சி செவிலியர்கள் மருத்துவர்களிடம் எந்தவித ஆலோசனையும் கேட்காமல் குழந்தைக்கு சுமார் 350 மில்லிக்கும் மேல் அளித்ததாக கூறப்படுகின்றது. . இதனால் இனிமா அளித்த சில மணி நேரங்களில் குழந்தை மயக்கமடைந்துள்ளது. அப்பொழுதும் செவிலியர்கள் மருத்துவர் களின் கவனத்திற்கு எடுத்து செல்லாமல் அலட்சியமாக இருந்து வந்துள்ளனர். இதனால் நேற்று அதிகாலை 3 மணியளவில் குழந்தை உயிரிழந்தது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈட்பட்டனர்.தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் மருத்துவனை நிர்வாகத்தின் தரப்பு அறிக்கைகளை பெற்றுகொண்டு குழந்தையை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்துப் இரு தரப்பினர் இடையேயும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.