டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் தேதி தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது.
இந்நிலையில், நேற்று டெல்லி முதல்வரை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி வீட்டில் நடைபெற்றது. இதில் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். புதிய முதல்வரை தேர்வு செய்ய முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக எம்.பி.யுமான ரவி சங்கர் பிரசாத், பாஜக தேசிய செயலாளர் ஓம் பிரகாஷ் தன்கட் ஆகியோர் மத்திய பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.கேஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் வர்மா, வீரேந்திர சச்தேவா, ரேகா குப்தா, விஜேந்தர் குப்தா, சதீஷ் உபாத்யாயா, அஜய் மஹாவர் ஆகியோரது பெயர்கள் முதல்வர் பதவிக்கு அடிபட்டன. அதேநேரம் டெல்லிக்கு பெண் ஒருவரை முதல்வராக தேர்வு செய்ய வேண்டும் என்ற பரிந்துரை முழுமையாக பரிசீலிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் நேற்று மாலை 7 மணியளவில் டெல்லி பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் பதவிக்கு ரேகா குப்தா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் டெல்லி முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றார். அவருக்கு துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 6 அமைச்சர்களுக்கும் பதவியேற்றுக்கொண்டனர். ராம்லீலா மைதானத்தில் நடைபெற்று வரும் நிகழ்வில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு அண்மையில் தேர்தல் நடைபெற்றது. 48 இடங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.