கோவை ஆர்.எஸ். புரத்தில் கடந்த 14ஆம் தேதி குண்டுவெடிப்பு தினத்தின் போது உயிரிழந்தவர் களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிபாஜக ஆர். எஸ். எஸ் உள்படபல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் நடந்தது. இந்த கூட்டத்தில்மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் பேசியதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் மீது ஆர். எஸ். புரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இந்த நிலையில் விசாரணைக்காக காடேஸ்வரா சுப்பிரமணியம் ஆர் எஸ் புரம் காவல் நிலையத்துக்கு அழைக்கப்பட்டார். அப்போது காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் 11 பேர் கோவை ஆர்.எஸ். புரம் காவல் நிலையத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு செய்யும் வகையில் நடந்து கொண்டதாக காடேஸ்வரா சுப்பிரமணியம், தசரதன், கிஷோர் சதீஷ் பாபா கிருஷ்ணன் உருவைபாலன், பாஜக மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் ஜெய்சங்கர் மகேஸ்வரன் முரளி ஆர். எஸ். எஸ் விஜயகுமார் ஆகியோர் மீது 3 பிரிவுகள் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0