உதகை; சென்னை உயர்நீதிமன்றத்தின் 29.05.2019 நாளிட்ட தீர்ப்பில் நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்டுள்ள குளிர்பானங்கள் மற்றும் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்டுள்ள உணவுப்பொருட்களை (Plastic water bottles, soft drinks and food items packed in plastic wrappers) பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. அரசாணை நிலை எண்.84, சுற்றுச் சுழல் மற்றும் வனத்துறை, நகல் 25.06.2018-ல் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தமிழ்நாடு முழுவதும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்டத்தில் தொடர் பிளாஸ்டிக் ஒழிப்பு பணிகள் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. தற்சமயம், மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், நீலகிரி மாவட்டத்திற்குள் நுழையும் அனைத்து அரசு மற்றும் தனியார் வாகனங்களில் தடைசெய்யப் பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாததை உறுதி செய்யும் பொருட்டு அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் நீலகிரி மாவட்டத்திற்குள் பயன்படுத்துவதையும், விற்பனை செய்வதையும், கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டு, தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,
தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தும் பயன்படுத்துவோர் மீது அபராதம் விதிக்கப்பட்டும் வருகிறது. எனவே, அரசு மற்றும் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் அறிவுரைகளை முறையாக செயல்படுத்தும் பொருட்டு, நீலகிரி மாவட்டத்திற்குள் தடைசெய்யப்பட்ட
பிளாஸ்டிக் பொருட்களை வெளியூர்கள் மாநிலத்தவர்கள் சார்ந்த பொதுமக்கள் சுற்றுலாப் பயணிகள் யாரும் கொண்டு வர வேண்டாம் எனவும், அறிவுறுத்தப்பட்டு வருகின்றன, மேலும் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் அனைத்து வாகனங்களையும் மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் நிறுத்தி பரிசோதனைக்கு உட்படுத்தி வரும்படி தெரிவிக்கப்பட்டது, மேலும், தடையை மீறி தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோர் மீது அதிகபட்ச அபராத தொகை விதிக்கப்படும் எனவும், தடையையும் மீறி தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் உடனடியாக மூடி முத்திரையிடப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டதின்
அடிப்படையில், 17.02.2025 அன்று கடந்த ஒரு வாரத்திற்கான நெகிழி ஒழிப்பு தொடர்பாக மேற் கொள்ளப்பட்ட ஆய்வு மற்றும் மேற்கொண்டு நெகிழி ஒழிப்பு பணியினை துரிதப்படுத்துமாறும், மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைகளை பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகள் முழுவதுமாக பின்பற்றும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி, நீலகிரி மாவட்டம் தடைசெய்யப்பட்ட
பிளாஸ்டிக் பொருட்கள் இல்லா மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.m இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக் இ.ஆ.ப., அவர்கள், உதகை வருவாய் கோட்டாட்சியர் சதீஷ், உதவி இயக்குநர்கள் முகமது ரிஸ்வான் (பேரூராட்சிகள்), சரவணகுமார் (ஊராட்சிகள்), உதகை வட்டாட் சியர் சங்கர் கணேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்உட்பட பலர் கலந்து கொண்டனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0