கஞ்சா வியாபாரி மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.

கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த மாதம் 9 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த வழக்கில் தொடர்புடைய தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாயன் மகன் பிரபாகரன் (வயது 40) என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் மேற்படி நபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்டக் காவல்கண்காணிப்பாளர் டாக்டர். கார்த்திகேயன், பரிந்துரை செய்தார்.. அப்பரிந்துரை யின் பேரில், கோவை மாவட்ட ஆட்சியர் .பவன்குமார் மேற்கண்ட நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். மேற்படி உத்தரவின்படி கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த வழக்கின் குற்றவாளியான பிரபாகரனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ்கைது செய்து சிறையில் அடைத்தனர்.