நீலகிரி உதகை சுற்றுலா பயணிகளை கவர்ந்த கமர்சியல் சாலை மனித கழிவு நீரால் சீர் குலைந்து போனது?

நீலகிரி மாவட்டம் உதகை கமர்சியல் சாலை, சுற்றுலா அலுவலகம், உதகை ஊராட்சி அலுவலகம், தனியார் பள்ளி, தமிழ்நாடு சுற்றுலாத்துறை தங்கும் விடுதி மற்றும் முக்கிய அரசு அலுவலகம் செல்லும் சாலைப் பகுதியில், பாதாள சாக்கடை நேற்று மாலையே உடைபட்டு மனிதக் கழிவு வெளியேறி கடுமையான துர்நாற்றம் வீசியது, இதனை உடனடியாக நேற்று சரி செய்ய தவறியதால் இன்று காலை கழிவுநீர் சாலை முழுவதும் பரவி சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் மூக்கை அடைத்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது? தற்போது இந்த பகுதியில் யாரும் வெளியே நடக்க முடியாமல் நிற்க முடியாமல் அவதிக்குள்ளாய் உள்ளனர்,? எந்தப் பக்கம் திரும்பினாலும் மனிதக் கழிவு சாலையில் சிதறி கிடக்கின்றன, நேற்றைய தினம் நகராட்சி மற்றும் பகுதி வார்டு கவுன்சிலர் நடவடிக்கை தாமதத்தால் ஏற்பட்ட விளைவு அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர், சாலை முழுவதும் மனித கழிவு? இப்பகுதியில் நடந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள் பொதுமக்கள் மூக்கை பிடித்துக் கொண்டு செல்கின்றன, தற்போது காலையில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் கழிவுநீரில் வலிக்கு விழுந்து காயத்துடன் சென்றார்,நாளுக்கு நாள் சுகாதார சீர்கேடை சந்திக்கும் நீலகிரி உதகை மக்கள், மாவட் நிர்வாகம் உதகை நகராட்சி நடவடிக்கை எடுக்க பகுதி மக்கள் கோபத்துடன் தெரிவிக்கின்றனர், இந்தப் பகுதியில் தொடர்ந்து பாதாள சாக்கடை அடைபடுவது வேடிக்கையாக உள்ளது, நீலகிரி மாவட்டம் உதகை கமர்சியல் சாலை சுற்றுலா பயணிகள் அதிகமாக வரக்கூடிய இடமாகும், மற்றும் தேனீர் கடைகள், உணவக விடுதிகள் வணிகர் கடைகள் போன்ற பிரபலமான பாரம்பரிய மிக்க சாலை மற்றும் அரசியல் கட்சி அலுவலகம் மற்றும் மருத்துவமனை செல்லும் முக்கியசாலையாகும்? இந்த சாலை பகுதியில் தொடர்ந்து பாதாள சாக்கடை அடைப்பட்டு கழிவுநீர் வெளியேறுவது தொடர்கதையாக உள்ளது, இதனை இந்த பகுதி நகர மன்ற உறுப்பினர் மற்றும் நகராட்சி முழு ஆய்வு செய்யாமல் அவ்வப்போத தற்காலிக சீரமைக்கும் பணிகள் செய்வதால் மீண்டும் மீண்டும் பாதாள சாக்கடை கழிவு நீர் வெளியேறுகிறது,இதனை பகுதி நகர மன்ற உறுப்பினர் மற்றும் நகராட்சி துறை முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டு செய்தால் மட்டுமே இந்தப் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்று அங்கு உள்ள பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர், பிறகு நீண்ட நேரம் துர்நாற்றம் அதிகமாக வீசியதால் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் இந்த சாலையில் நடந்து செல்ல மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள், இதை அறிந்த நகராட்சி துறை ஒரு லாரி தண்ணீர் மூலம் சிறிய ஓஸ் பைப்பு மூலம் இந்த கழிவு நீரை அகற்றும் வேறு கொண்டனர், ஆனால் அது சிறிய பலன் மட்டுமே தந்தது, மீண்டும் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது, இதனை அறிந்த கேசினோ கார் ஸ்டாண்ட் ஓட்டுனர்கள் கடை வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து ரூபாய் மூன்று ஆயிரம் செலவு செய்து தண்ணீர் லாரிகள் மூலம் அப்பகுதிகளை கார் ஓட்டுநர்கள் தாங்களாகவே தூய்மைப்படுத்தினர், நகராட்சி கழிவு நீரால் சீரழிந்த பகுதியை முழுமையாக சுத்தம் செய்யாதது இதற்கு முக்கிய காரணமாகும் என்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர்.