கோவை மாவட்டம் வால்பாறையில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றம் துறையால் அறிவிக்கப்பட்டுள்ள பல்லுயிர் பாதுகாப்பு சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம் வரைவு அரசாணையால் வால்பாறை பகுதியில் ஏற்படும் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரத்தை பாது காக்கும் வகையில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் உணர்திறன் மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி இந்தியா கூட்டணி கட்சிதொழிற்சங்கத்தினர் ஒருங்கிணைந்த ஒருநாள் உண்ணாநிலை அறப்போ ராட்டம் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையின் மாநில செயலாளர் வி.பி.வினோத்குமார் தலைமையில் நடைபெற்றது இந்த உண்ணாநிலை அறப்போராட்டத்தை வால்பாறை நகரச்செயலா ளர் குட்டி என்ற சுதாகர் தொடங்கிவைத்தார் இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் சிறப்புரையாற்றினார் அப்போது மத்திய அரசின் சுற்றுச்சூழல் உணர்திறன் மசோதாவை ரத்து செய்து வால்பாறை பகுதி மக்களின் நலன் காக்க கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜியின் கவனத்திற்கு கொண்டு சென்று அவரின் ஆலோசனைக்கு இணங்க தமிழக முதல்வரை நேரில் சந்தித்து உரிய பணிகளை மேற்க் கொள்வதாகவும் தெரிவித்து உண்ணாநிலை அறப்போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் பழச்சாறு வழங்கி நிறைவு செய்தார் இந்த உண்ணாநிலை அறப்போராட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சி தொழிற்சங்க நிர்வாகிகள் எஸ்.மோகன், யூ.கருப்பையா, செ.வீரமணி, எஸ்.கல்யாணி, எஸ்.பரமசிவம், கேசவமருகன், நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம், வழக்கறிஞர் பால்பாண்டி, நகர் மன்ற துணைத் தலைவர் த.ம.செந்தில்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் கோழிக்கடை கணேசன், மாவட்ட நிர்வாகிகள் ஈ.கா.பொன்னுச்சாமி, ஜே.பாஸ்கர் மற்றும் தொழிற் சங்க பொறுப்பாளர்கள், கட்சி நிர்வாகிகள், நகர் மன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டனர.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0