கோவையில் பெட்ரோல் குண்டு வைத்திருந்ததாக மேலும் 4 பேர் கைது.

கோவை செல்வபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தினேஷ் பாபு நேற்று அதிகாலையில் செல்வபுரம் தெலுங்குபாளையம் பிரிவில் வாகன சோதனை நடத்தினார். அப்போது சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 2 பெட்ரோல் குண்டு இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்ட து.இது தொடர்பாக சுகுணாபுரம் மைல்கல் ,பழனி யப்பா நகரைசேர்ந்த நாசர் பாட்ஷா (வயது 36) கைது செய்யப்பட்டார். விசாரணையில் நாசர் பாட்சா, மணிகண்டன் என்பவரிடம் ரூ 5ஆயிரம் கடன் கேட்டாராம். அவர் கொடுக்க மறுத்ததால் அவரது வீட்டின் மீது வெடிகுண்டு வீச சென்றதாக போலீ சாரிடம் கூறியுள்ளார். இதற்கு உடந்தையாக இருந்ததாக கரும்பு கடைபகுதியைச் சேர்ந்த பைசல் ரகுமான் (வயது 30) ஜாகிர் உசேன் (வயது 35) அண்ணா காலனி இதயத்துல்லா ( வயது 36 )ஆஷாத் நகர் முகமத் ஹர்ஷத் ( வயது 34) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து ஒரு இருசக்கர வாகனமும் ,2 பெட்ரோல் குண்டுகளும் கைப்பற்றப்பட்டது.