கோவை செல்வபுரம் போலீசார் அந்த பகுதியில் இன்றுஅதிகாலையில் வாகன சோதனைநடத்தினர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒரு வாலிபரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அவரது பைக்கில் 2 பெட்ரோல் குண்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் பெட்ரோல் குண்டை பறிமுதல் செய்து அந்த வாலிபரைகாவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். விசாரணை யில் அவர் சிவாலயா பகுதியை சேர்ந்த நாசர் (வயது 38)) என்பதும், பாஜக ஆன்மீக பிரிவு மாவட்ட தலைவர் மணிகண்டன் என்பவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீச சென்று கொண்டு இருந்ததும் தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-நாசரும், மணிகண்டனும் சிவாலயா பகுதியில் தனியார் நிறுவனத்தில் ஒன்றாக பணிபுரிந்து வருகிறார்கள். அப்போது நாசர், மணிகண்டனிடம் ரூ. 5 ஆயிரம் கடன் கேட்டுள்ளார். ஆனால் மணிகண்டன், அவருக்கு கடன் தராமல் இருந்து வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நாசர், மணிகண்டன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முடிவு செய்து அவரது வீட்டை நோக்கி சென்றுள்ளார். அப்போது போலீசாரின் வாகன சோதனையில் நாசர் சிக்கி கொண்டனர். ஏற்கனவே நாசர், விஸ்வரூபம் படத்தின் போது திரையரங்கின் மீதும், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் வீட்டின் மீதும், செல்வபுரத்தில் ஒரு சிப்ஸ் கடை மீதும் பெட்ரோல் குண்டு வீசி உள்ளார். இதுகுறித்து அவர் மீதுஏற்கனவே 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று பெட்ரோல் குண்டுடன் சென்றது சம்பந்தமாகவும் நாசர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது அவரை கைது செய்து தொடரந்து விசாரணை நடத்தி வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0