கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு. சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இந்த கோவில் முருகப்பெருமானின் 7-வது படை வீடாக பக்தர்களால் கருதப்படுகிறது. இங்கு தைப்பூச திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு க்கான தைப்பூசத் திருவிழாகடந்த 5 – ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 6 மணிக்கு கோபூஜை நடந்தது .அதனை தொடர்ந்து சாமிக்கு பால் ,பன்னீர், ஜவ்வாது உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும் மகா தீபாரதனையும் நடந்தது. அதன் பின்னர் சாமி முத்தங்கி அலங்காரத்தில் காட்சியளித்தார் இதையடுத்து திருவிழாவுக்கான சேவல் பொறித்த கொடியை ஏற்றுவதற்காக சிறப்பு பூஜைகள் நடந்தது. கொடியேற்றத்தையொட்டி விநாயகர் மூஷிக வாகனத்திலும், சுப்ரமணியசாமி வள்ளி தெய்வானையுடன் கற்பக விருட்சக வாகனத்திலும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பூஜைகள் முடிந்ததும் கோவில் முன் உள்ள கொடிமரத்தில் தைப்பூசத் திருவிழாவிற்கான சேவல் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. அப்போது அங்கு திரண்டு இருந்த பக்தர்கள் மருதமலை முருகனுக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டனர். மதியம் 12மணிக்கு உச்சி காலஅபிஷேகம், சுவாமி அன்ன வாகனத்தில் வீதி உலா நடந்தது. புனித யாகசாலை மண்டபத்தில் மாலை 4மணிக்கு வேள்வி பூஜை தொடங்கியது.தைப்பூசத் திருவிழாவை யொட்டி தினந்தோறும் சாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று சுப்பிரமணிய சுவாமி வள்ளி – தெய்வானை திருக்கல்யாணம்நடந்ததுமூலவர் சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது பின்னர் மண்டபத்தில் சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது சுப்ரமணியசாமி நீல பட்டுஉடுத்தியும்,வள்ளி மஞ்சள் நிற பட்டும், தெய்வானை பச்சை பட்டும் உடுத்தி மணக்கோலத்தில் காட்சியளித்தனர் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து சுவாமிக்கு மொய் எழுதினார்கள். மஞ்சனத்தில் திருவீதி உலா நடந்தது. தேவாரம் பாடல்களை ஓதுவார்கள் பாட, தொடர்ந்து உரல் இடித்து திருக்க யாண நிகழ்ச்சி நடந்தது.அப்போது முருகருக்கு அரோகரா மருதாலமூர்த்திக்கு அரோகரா என பக்தர்கள் விண் அதிர பக்தி முழக்க மிட்டனர் .விழாவின் சிகர நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் இன்று ( செவ்வாய்) காலை 11 மணிக்கு நடைபெற்றது..இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக மருதமலை கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.இதை யொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டி ருந்தது. இதற்கான ஏற்பாடுகளை மருதமலை கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஜெயக்குமார் .துணை ஆணையர் செந்தில்குமார் அறங்காவலர்கள் மகேஷ் குமார், பிரேம்குமார், கனகராஜ், சுகன்யா ராஜரத்தினம்ஆகியோர் செய்து வருகிறார்கள்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0