ராமநாதபுரத்தை அடுத்த காட்டூரணி பகுதியைச் சேர்ந்தவர் சோனியா இவர் கை குழந்தை உட்பட இரண்டு குழந்தைகளோடு இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் குறை தீர்ப்பு நாள் கூட்டத்திற்கு தனது குழந்தைகளோடு வருகை தந்த நிலையில் திடீரென மறைத்து. வைத்திருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் பொதுப் பாதையை ஆக்கிரமித்து வைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே செல்ல கூடாது என தொடர்ந்து அச்சுறுத்துவதாகவும் கடப்பாரை மண்வெட்டி உள்ளிட்ட வற்றால் தொடர்ந்து தொடர்ந்து அச்சுறுத்துவதாகவும் இதுகுறித்து பலமுறை கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் கண்ணன் என்பவரது உறவினர் ராமேஸ்வரம் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக உள்ளதால் வழக்கு கூட பதியாமல் அலைக்கழித்து வருவதாகவும் உன்னால் என்ன செய்ய முடியும் எனக் கூறி தனது வீட்டு வாசலில் வந்து சிறுநீர் கழிப்பதாகவும் எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கை குழந்தையோடு பாதிக்கப்பட்ட பெண் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வாயில் முன்பாக மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதனைத் தொடர்ந்து பாதுகாப் பிலிருந்து காவல்துறையினர். பெண்ணையும் குழந்தையையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர் அப்பொழுது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மீண்டும் நான் தற்கொலைக்கு முயற்சி செய்வேன் என்று கூறியபடி சென்று உள்ளார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0