கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணியசுவாமி திருக்கோவிலின் 20 வது ஆண்டு தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கடந்த 7 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று சிறப்பு அபிஷேகம் ஆராதனையும் அதைத்தொடர்ந்து வால்பாறை எம்ஜிஆர் நகர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் இருந்து திருமண சீர் வரிசை எடுத்துவந்து அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி மற்றும் வள்ளிநாயகி , தெய்வானை தேவியருக்கு யாகசாலையில் சிறப்பு யாகம் நடத்தப் பட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி வெகுசிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில் இன்று காலை சிறப்பு பூஜை ஆராதனை நடைபெறுகிறது அதனைத் தொடர்ந்து லட்சுமணன் மற்றும் வால்பாறை முருகபக்தர்களின் அங்க அலகு பறவைகாவடி ஊர்வலம் வால்பாறை நல்லகாத்து ஆற்றிலிருந்து புறப்பட்டு நகர்பகுதி வழியாக பக்தர்கள் புடைசூழ ஊர்வல மாக ஆலயத்தை சென்றடைவதை தொடர்ந்து மாபெரும் அன்னதானமும் அதைத்தொடர்ந்து. பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் மாலையில் அலங்காரத்தேரில் வள்ளி தெய்வானை தேவியருடன் திருமுருகன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற உள்ளது இந்த தைபூச விழா சிறப்பு ஏற்பாடுகளை தைப்பூச விழா தலைவர் ஏ.வி.வள்ளிக்கண்ணு, செயலாளர் ம.மயில்கணேசன், பொருளாளர் பி.சிந்துசெல்வம், செயல் அலுவலர் டி.கதிரவன் மற்றும் தைப்பூச விழா குழுவினரும் துரிதமாக செய்து வருகின்றனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0