நீலகிரி மாவட்டத்திற்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் தளபதி அவர்களால் நீலகிரி கிழக்கு மாவட்ட தலைமை நிர்வாகிகள் அறிவிப்பு,.

நீலகிரி மாவட்டம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் நல்லாசியுடன் , அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்களின் வழி காட்டுதலின்படி நீலகிரி மாவட்ட தலைவர் ரமேஷ் மாவட்ட செயலாளர் பாமா ரமேஷ் மாவட்ட இ.செயலாளர் கணேஷ்
மாவட்ட பொருளாளர் ராஜேஷ் மாவட்ட துணை செயலாளர்கள் ஆனந்த், பஷீர், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், ஷீனா கெளசர்,ஷர்புநிஷா,வாணி நஞ்சன்,குணா சைலஜா, ஆதி இப்ராஹிம்,செந்தில் குமார், சூர்யா பிரகாஷ், நூர் முகம்மது, ராஜேஷ்,பரத், 2/02/2025 அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களால் நீலகிரி கிழக்கு மாவட்ட தலைமை நிர்வாகிகளாக அறிவித்ததை தொடர்ந்து வரும் 09/02/2025 ஞாயிறு கிழமை மதியம் 01:00 மணியளவில் உதகை சேரிங்கிராஸ் பகுதியில் மாபெரும் வரவேற்பு விழா நடைபெறவுள்ளது, இந்நிகழ்ச்சியில் நீலகிரி கிழக்கு மாவட்ட அணி அமைப்பாளர்கள், நிர்வாகிகள் ஒன்றிய செயலாளர்கள், அதன் நிர்வாகிகள், பேரூராட்சி செயலாளர்கள்,அதன் நிர்வாகிகள், ஊராட்சி செயலாளர்கள் அதன் நிர்வாகிகள், நகர செயலாளர்கள், மற்றும் கிளை செயலாளர்கள் அதன், நிர்வாகிகள் வார்டு நிர்வாகிகள் மற்றும் நீலகிரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர்கள் என பலர் இவ்விழாவில் கலந்து கொள்ள உள்ளனர், மேலும் வரவேற்பை தொடர்ந்து உதகை ஏடிசி திடலில் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகள், மற்றும் நல உதவி திட்டங்கள் வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளன,ஆகையால் நீலகிரி மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் அனைத்து உறுப்பினர்கள் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு தமிழக வெற்றி கழக மாவட்ட தலைவர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் அனைத்து ஏற்பாடுகளையும் தொடர்ந்து செய்து வருகின்றன,.