கோவை; கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் சுஜித் ( வயது 24 )இவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அங்குள்ள அழகிய பாண்டி புரத்தைச் சேர்ந்த 23 வயதான நர்சுக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. ஒருவர் ஒருவர் கடந்த 4 ஆண்டு களாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் அந்த நர்சுக்கு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை கிடைத்தது. இதனால் அவர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள விடுதியில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார். இதற்கிடையில் அந்த நர்சக்கும் சுஜித்துக்கும் இடையே திடீரென்று பிரச்சனை ஏற்பட்டது. இதனால் அவர் சுஜித்திடம் பேசுவதை தவிர்த்து வந்தார். பலமுறை அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போதும் அவர் பேசவில்லை என்று கூறப்படுகிறது. 4ஆண்டுகளாக தன்னை காதலித்து தினமும் உருகி, உருகி பேசி வந்த காதலி திடீரென்று பேசுவதை நிறுத்தியதால் சுஜித் மனம் உடைந்தார். தன்னை தவிர்த்து விட்டு வேறு யாருடன் தனது காதலி பேசுகி றாரோ? என்ற சந்தேகம் அவருக்கு ஏற்பட்டது. இது தொடர்பாக தனது காதலியை நேரில் சந்தித்து பேச வேண்டும். தன்னை காதலிக்கவில்லை என்றுகூறினால் அவரை கொலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார். இதற்கு சிறிய அளவிலான ஒரு கத்தியும் வாங்கிக் கொண்டு சுஜித் கோவை வந்தார் .பின் தன் காதலியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். அவர் பேசவில்லை பலமுறை தொடர்பு கொண்ட போதும் அவர் பேசவில்லை என்பதால் தான் கோவை வந்துவிட்டதாகவும் உனது விடுதி முன் நிற்பதா கவும் வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த நர்ஸ் விடுதியை விட்டு வெளியே வந்தார். பின்னர் சுஜித் அவரை சந்தித்து ஏன்? என்னிடம் பேச மறுக்கிறாய். நான் என்ன தவறு செய்தேன்? நீ வேறு யாருடன் பேசுவதால் என்னை தவிர்க்கிறாயா? என்று கேட்டார். இதனால் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது .அப்போது அந்த நர்ஸ் எனக்கு உன்னை பிடிக்கவில்லை. அதனால் தான் உன்னிடம் பேசவில்லை. இனிமேல் என்னிடம் பேசக்கூடாது. எனது செல்போனுக்கு தொடர்பு கொண்டு தொந்தரவு செய்யக்கூடாது என்று கூறினாராம். இதனால் ஆத்திரம்அடைந்த சுஜித் நான் உன்னை 4 ஆண்டுகளாக காதலித்து வருகி றேன். என்னால் உன்னை மறக்க முடியுமா? எனக்கு கிடைக்காத நீ வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று கூறி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரது வயிற்றில் குத்த முயன்றார். ஆனால் தடுத்ததால் அவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டது- உடனே அவர் கூச்சல் போட்டார் .சத்தம் கேட்டு அங்கிருந்த பொதுமக்கள் ஓடி வந்தனர். உடனே சுஜித் தப்பி ஓட முயன்றார் .அதற்குள் பொதுமக்கள் அவரை மடக்கு பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவர் ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். போலீ சார் வழக்கு பதிவு செய்து சுஜித்தை கைது செய்தனர். கையில் காயமடைந்த நர்சுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் கோவையில் பெறும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
